அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், நாகர்கோயிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தேவார வைப்புத்தலமாகும். அப்பர் பாடிய பெருமையுடையது. [1]

அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீச்சுரம் அகத்தீசுவரர் கோயில்
ஆள்கூறுகள்:8°06′37″N 77°31′27″E / 8.1103°N 77.5242°E / 8.1103; 77.5242
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:அகத்தீஸ்வரம்
சட்டமன்றத் தொகுதி:கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதி:கன்னியாகுமரி
ஏற்றம்:39.69 m (130 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:அறம் வளர்த்த நாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

அமைவிடம் தொகு

நாகர்கோயில் - கன்னியாகுமரி சாலையில் உள்ள கொட்டாரம் என்னுமிடத்திலிருந்து, ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வடுகன்பற்று என்னுமிடத்திற்கு அருகில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 130 அடி உயரத்தில், 8°06′37″N 77°31′27″E / 8.1103°N 77.5242°E / 8.1103; 77.5242[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இக்கோயில் அமையப் பெற்றுள்ளது.

இறைவன்,இறைவி தொகு

கருவறையில் உள்ள மூலவர் அகத்தீசுவரர் ஆவார். இறைவி அறம் வளர்த்த நாயகி, அமுதவல்லி ஆவார்.[2] இத்தலம் அகத்தியர், தன்னுடைய மனைவி லோபா முத்திரையுடன் வழிபட்ட சிறப்பினையுடையது.

குடமுழுக்கு தொகு

21 மார்ச் 1996இல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

மற்றொரு தலம் தொகு

இதே பெயரில் மற்றொரு கோயில் திண்டிவனம் பாண்டிச்சேரி சாலையில் உள்ள கிளியனூரில் அகத்தீசுவரம் என்ற பெயரில் உள்ளது. [2]

மேற்கோள்கள் தொகு

  1. "அகத்தீஸ்வரர் திருக்கோவில், அகத்தீச்சரம், தேவார வைப்புத்தலங்கள்". Archived from the original on 2018-10-22. பார்க்கப்பட்ட நாள் 2018-11-08.
  2. 2.0 2.1 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புகள் தொகு