அக்னி-5

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

அக்னி-5 ஆனது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் திட எரிபொருள் ஏவுகணையாகும். இது இந்தியாவிற்கு 5,500 கிமீ தொலைவிற்கு அப்பாலுள்ள இலக்கினையும் தாக்கவல்ல வல்லமையை அளிக்கும்.[1][2][7] இந்த ஏவுகணை 19 ஏப்ரல் 2012 மற்றும் 15 செப்டம்பர் 2013 அன்றும் ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது[11].[12].

அக்னி-5
10 திசம்பர் 2018 அன்று நடத்தப்பட்ட அக்னி-5 சோதனை
வகைகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை[1][2]
அமைக்கப்பட்ட நாடு இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது2014[3] (Under development) [4]
பயன் படுத்தியவர்இந்திய ராணுவம்
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO),
பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL)
அளவீடுகள்
எடை50,000 கிகி[5]
நீளம்17.5 மீ [6]
விட்டம்2 மீ

அதிகபட்ச வரம்பு6,000 கிலோமீட்டர்கள் (3,700 mi)[7]
வெடிபொருள்அணு
போர்க்கலன் எடை1.1 டன்/1000 கிகி[8]

இயந்திரம்மூன்று நிலை திடம்
இயங்கு தூரம்
5,500 கிலோமீட்டர்கள் (3,400 mi)-க்கு மேல்[1][7]
வேகம்24 Mach[9]
ஏவு
தளம்
8 x 8 Tatra (Transporter erector launcher) & Rail Mobile Launcher (Canisterized missile package) [10]
போக்குவரத்துசாலை வழி எடுத்துச்செல்ல இயலும்.
அக்னி ஏவுகணை தாக்குதல் தூரம்.

சிறப்புக் கூறுகள் தொகு

  1. அக்னி-5 சோதனை தெற்காசிய வலயத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஓர் வல்லரசாக விளங்க இந்தியா எடுக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதன் வீச்சில் பெய்ஜிங், சாங்காய் சீன நகரங்கள் உள்ளன.[13]
  2. அக்னி-5 மூன்று நிலைகளைக் கொண்ட ஏவுகணையாகும். இதனால் 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) வீச்சிற்கு 1.5 டன் எடையுள்ள போர் வெடிபொருளை கொண்டு செல்லக்கூடியது.[13]
  3. தற்போதைய நீண்ட தொலைவு ஏவக்கூடிய ஏவுகணையான அக்னி-3 3,500 கிமீ (2,100 மைல்கள்) செலுத்தக்கூடியது.
  4. ஐக்கிய அமெரிக்கா, உருசியா, பிரான்சு, சீனா ஆகிய நாடுகளே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செயலாக்க வல்லன.
  5. அக்னி-5 ஏவுகணை முழுமையும் திடநிலை எரி பொருளால் இயங்குகிறது; 17 மீ உயரமுள்ள இந்த ஏவுகணையின் முனையில் பல்வேறு வகை வெடிபொருள்கள், அணுகுண்டு, வேதியியல் நச்சு பொருள், உயிரியல் ஆயுதம் அல்லது வேறு சேதம் விளைவிக்கும் பொருள் எடுத்துச் செல்லக்கூடியது.[13]
  6. அக்னி-5 ஏவுகணையை கட்டமைக்க 25 பில்லியன் ($486 மில்லியன்) செலவாகியுள்ளது.[13]
  7. இதன் மூலம் போர்ப்பொருள்களைத் தவிர செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்த முடியும்.[13]
  8. அக்னி-5 ஏவுகணை செயற்கைக்கோள்களையும் தாக்கி அழிக்கும் திறன் பெற்றது.
  9. அக்னி 5 ஏவுகணை முற்றிலும் உள்நாட்டில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.

இந்தியா நவீன ஏவுகணையை உருவாக்கிவிடாமல் தடுக்க வல்லரசு நாடுகள் கடந்தகாலத்தில் போட்ட முட்டுக்கட்டைகளை மீறி இந்தியா அக்னி-5 ஏவுகணையை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Eyeing China, India to enter ICBM club in 3 months". The Times of India. Nov 17, 2011 இம் மூலத்தில் இருந்து 2012-04-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120419150207/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-17/india/30409335_1_agni-v-agni-iv-agni-programme-director.  பரணிடப்பட்டது 2012-04-19 at the வந்தவழி இயந்திரம்
  2. 2.0 2.1 "With Russian help, India to enter ICBM club soon". Dailypioneer. Oct 8, 2011. http://www.dailypioneer.com/columnists/item/47621-with-russian-help-india-to-join-icbm-big-league-soon.html. 
  3. "DRDO Lab Develops Detonator for Nuclear Capable Agni-V Missile As It Gets Ready For Launch". Defencenow. January 17, 2012 இம் மூலத்தில் இருந்து ஜனவரி 22, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120122074527/http://www.defencenow.com/news/474/drdo-lab-develops-detonator-for-nuclear-capable-agni-v-missile-as-it-gets-ready-for-launch.html. 
  4. "Agni V test depends on prime success". IBNLive இம் மூலத்தில் இருந்து 2011-10-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111027042900/http://ibnlive.in.com/news/agni-v-test-depends--on-prime-success/194412-60-117.html. பார்த்த நாள்: 2011-11-11.  பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம்
  5. Preparations apace for Agni V launch
  6. "DRDO plans to test 10 missiles this year". The Times of India. Jan 27, 2011 இம் மூலத்தில் இருந்து 2013-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130501085437/http://articles.timesofindia.indiatimes.com/2011-01-27/bhubaneswar/28376198_1_agni-ii-km-range-agni-iii. பார்த்த நாள்: 19 October 2011.  பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
  7. 7.0 7.1 7.2 "Agni-4/5". Missile Threat. 19 July 2010 இம் மூலத்தில் இருந்து 2 பிப்ரவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120202030625/http://missilethreat.com/missilesoftheworld/id.189/missile_detail.asp. 
  8. Agni-V getting ready for launch
  9. India’s most potent missile Agni V all set for launch
  10. Y. Mallikarjun, Agni-V design completed; to be test-fired in 2010 பரணிடப்பட்டது 2009-02-20 at the வந்தவழி இயந்திரம், தி இந்து, 27 November 2008
  11. "கண்டம் விட்டு கண்டும் தாவும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது". தினமலர். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 19, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "அக்னி -5 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ; அணு ஆயுதம் ஏந்தி இலக்கை தாக்கியது". தினமலர். பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 15, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 "Agni-V: All you want to know about it". த எகானமிக் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 18, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்னி-5&oldid=3567509" இலிருந்து மீள்விக்கப்பட்டது