அங்கத் சிங்

அங்கத் சிங் சைனி (Angad Singh Saini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1990 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] காங்கிரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒர் அரசியல்வாதியாகவும் பஞ்சாபின் நவான்சகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபராகவும் இவர் அறியப்படுகிறார். 2017 ஆம் ஆண்டில் இவருடைய 26 ஆவது வயதில், பஞ்சாப் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் உறுப்பினர்களில் [2] ஒருவரானார். உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்த அதிதி சிங்கை மணந்து கொண்டார். [3]

அங்கத் சிங்
இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்
பதவியில்
4 பிப்ரவரி 2017 – 2022
முன்னையவர்குரிக்பால் கவுர்
தொகுதிநவான் சகர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 அக்டோபர் 1990 (1990-10-23) (அகவை 33)
அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா
தேசியம்Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அதிதி சிங் (2019)
பெற்றோர்(s)பர்காசு சிங் (தந்தை)
குரிக்பால் கவுர் (தாய்)
வேலைஅரசியல்வாதி

நவான் சகர் சட்டமன்றத் தொகுதியை தில்பாக் சிங் ஆறு முறை பிரதிநிதித்துவப்படுத்தினார். பின்னர் தில்பாக் சிங்கின் மருமகன் பிரகாசு சிங் 2002 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். பிரகாசு சிங் 2007 ஆம் ஆண்டில் அந்த இடத்தை இழந்தார். அதே ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இறந்தார். அங்கத் சிங் பிரகாசு சிங்கின் மகன் ஆவார். [4] இவர் தனது தாயார் குர் இக்பால் கவுரைத் தொடர்ந்து நவான்சகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Angad Singh Nawanshahr". angadsinghnsr.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 June 2017.
  2. "Meet Angad Singh Saini: Youngest Congress candidate in Punjab polls 2017" (in en). hindustantimes.com/. 7 January 2017. http://m.hindustantimes.com/punjab/in-nawanshahr-congress-banks-on-gabru-angad-singh-saini/story-07Bu37kpFBgYTPKQ7zAV4K.html. 
  3. "रायबरेली विधायक अदिति सिंह और एमएलए अंगद सिंह शादी के बंधन में बंधे, देखें खूबसूरत तस्वीरें". Amar Ujala. பார்க்கப்பட்ட நாள் 20 May 2020.
  4. "Meet Angad Singh Saini: Youngest Congress candidate in Punjab polls 2017" (in ஆங்கிலம்). 2017-01-07. {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கத்_சிங்&oldid=3826216" இலிருந்து மீள்விக்கப்பட்டது