அஜய் சிங் சௌதாலா

இந்திய அரசியல்வாதி

அஜய் சிங் சௌதாலா (Ajay Singh Chautala) (பிறப்பு: மார்ச் 13, 1961) இந்தியாவின் முன்னாள் மக்களவை உறுப்பினரும், விளையாட்டு நிர்வாகியுமாவார். இவர், இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின்[1][2] பேரனும், அரியானாவின் முன்னாள் முதலைமைச்சர் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் மூத்த மகனும், தற்போதைய அரியானாவின் துணை முதல்வரான துஷ்யந்த் சௌதாலா,[3] [4] திக்விஜய் சௌதாலா[5][6] ஆகியோரின் தந்தையாவார்.

முனைவர்
அஜய் சிங் சௌதாலா
அரியானா சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிதப்வாலி
மக்களவை உறுப்பினர்
தொகுதிபிவானி
மாநிலங்களவை உறுப்பினர்
தொகுதிஅரியானா
இந்திய [[[மேசைப்பந்தாட்டம்|மேசைப்பந்தாட்டக்]] கூட்டமைப்பின் தலைவர்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிநொகர்
ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிதந்தா ராம்கர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மார்ச்சு 1961 (1961-03-13) (அகவை 63)
சௌதாலா, கிழக்கு பஞ்சாப், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி (1980 – 1988)
ஜனதா தளம் (1988 – 1996)
இந்திய தேசிய லோக் தளம் (1996 – 2018)
ஜனநாயக ஜனதா கட்சி (2018 – தற்போது வரை)
துணைவர்நைனா சிங் செளதாலா
பிள்ளைகள்
2
பெற்றோர்s
வாழிடம்(s)திகார் சிறை (தற்காலிகமாக 2013 முதல் 2023 வரை)
சிர்சா மாவட்டச்சிறை, அரியானா (நிரந்தரமாக)
முன்னாள் கல்லூரிகுருசேத்ரா பல்கலைக்கழக
ராஜஸ்தான் பல்கலைக்கழகம்
வேலைவிவசாயி, அரசியல்வாதி

சுயசரிதை தொகு

இவருக்கு இரண்டு மகன்கள் துஷ்யந்த் சவுதாலா, தற்போதைய ஹரியானாவின் துணை முதல்வர்(இளைய எம்.பி., ஹிசார் ஹரியானா 16 வது மக்களவை) [7]மற்றும் திக்விஜய் ச ut தாலா (தேசியத் தலைவர் என் ஐஎன்எஸ்ஓ).[8] [9]

இவர், தனது இளங்கலை பட்டத்தை குருசேத்ரா பல்கலைக்கழகத்திலும், முதுகலை பட்டம் (பொது நிர்வாகம்), சட்டம் ஆகியவற்றை ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். இவர் 1980களில் தீவிர அரசியலில் ஈடுபட்டார். ராஜஸ்தானின் டாட்டா ராம் கர் (1989) தொகுதியிலிருந்தும், நோஹர் (1993) தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]


1999இல், பிவானி மக்களவைத் தொகுதியிலிருந்து,[11] உறுப்பினராகவும், பின்னர் 2004இல் அரியானாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009இல் தப்வாலியி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினரானார்

பின்னர், இவரது மனைவி நைனா சிங் சௌதாலா 2014 ஆம் ஆண்டில் தப்வாலியிலிருந்து சட்டமன்ற உறுப்பினரானார். இவர்களது மகன் துஷ்யந்த் சௌதாலா ஹிசாரி மக்களவை உறுப்பினராக 2014 முதல் 2019 வரை இருந்தார்.

ஆட்சேர்ப்பு மோசடியில் தண்டனை தொகு

1999 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் அரியானா மாநிலத்தில் 3,206 ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த மோசடி தொடர்பாக சௌதாலாவுடன் மேலும் 53 பேர் மீதும் ஜூன் 2008 இல், குற்றம் சாட்டப்பட்டது. இவரையும் இவரது தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் படியும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் படியும் பல்வேறு விதிகளின் கீழ் ஜனவரி 2013 இல், புது தில்லி நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.[12] 3,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சட்டவிரோதமாக சேர்த்துக் கொண்ட வழக்கில் இவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.[13] 1989ஆம் ஆண்டு முன்னாள் தொடக்கக் கல்வி இயக்குநர் சஞ்சீவ் குமார் தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில் மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.[14][15]

இவர்கள் இருவர் மீதான தண்டனையை தில்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளன.[16]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Singh, Raj Pal (1988). Devi Lal, the man of the masses. Veenu Printers and Publications. p. 3.
  2. "The Jat patriarch". Frontline 18 (9). 28 April – 11 May 2001. http://www.frontline.in/static/html/fl1809/18091200.htm. 
  3. "In another scion rise, Dushyant comes out of dad Ajay's shadow to lead INLD". இந்தியன் எக்சுபிரசு. 11 April 2014. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  4. "Elections 2014: Dushyant Chautala of INLD takes lead over HJC president Kuldeep Bishnoi". தி எகனாமிக் டைம்ஸ். 16 May 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/elections-2014-dushyant-chautala-of-inld-takes-lead-over-hjc-president-kuldeep-bishnoi/articleshow/35213304.cms. 
  5. "INSO Makes it to Guinness Book of World Records". இந்தியன் எக்சுபிரசு. 1 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  6. "MOST PEOPLE TO SIGN UP AS ORGAN DONORS - EIGHT HOURS". Guinness World Records. 16 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  7. "Elections 2014: Dushyant Chautala of INLD takes lead over HJC president Kuldeep Bishnoi". தி எகனாமிக் டைம்ஸ். 16 May 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/elections-2014-dushyant-chautala-of-inld-takes-lead-over-hjc-president-kuldeep-bishnoi/articleshow/35213304.cms. 
  8. "INSO Makes it to Guinness Book of World Records". இந்தியன் எக்சுபிரசு. 1 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  9. "MOST PEOPLE TO SIGN UP AS ORGAN DONORS - EIGHT HOURS". கின்னஸ் உலக சாதனைகள். 16 December 2013. பார்க்கப்பட்ட நாள் 26 June 2014.
  10. Parliament Member Details. Haryana Vidhan Sabha. Retrieved on 2008-03-19.
  11. Biographical Sketch, Member of Parliament, 13th Lok Sabha பரணிடப்பட்டது 15 சூன் 2009 at the வந்தவழி இயந்திரம். Parliament of India. Retrieved on 2008-03-19
  12. "Former Haryana CM Chautala, his son, 53 others convicted in teachers' recruitment scam". CNN-IBN. 16 January 2013 இம் மூலத்தில் இருந்து 19 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130119053056/http://ibnlive.in.com/news/former-haryana-cm-chautala-his-son-53-others-convicted-in-teachers-recruitment-scam/316028-37-64.html.  "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-01-19. பார்க்கப்பட்ட நாள் 2021-07-05.
  13. Kattakayam, Jiby (2013-01-23). "Chautala, son jailed for 10 years". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/news/national/10year-jail-for-chautala-son-in-recruitment-scam/article4331656.ece. 
  14. "Why Chautala is in jail: All you need to know about JBT scam".
  15. TNN (16 January 2013). "Recruitment scam: Ex-Haryana CM Om Prakash Chautala convicted, arrested". Times Of India. http://timesofindia.indiatimes.com/india/Recruitment-scam-Ex-Haryana-CM-Om-Prakash-Chautala-convicted-arrested/articleshow/18043964.cms. 
  16. "Teachers' recruitment scam: Supreme Court upholds jail term of Om Prakash Chautala, son Ajay". Indian Express. http://indianexpress.com/article/india/india-others/jbt-scam-supreme-court-upholds-jail-term-of-om-prakash-chautala-his-son. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_சிங்_சௌதாலா&oldid=3514354" இலிருந்து மீள்விக்கப்பட்டது