அஜய் ஜடேஜா

இந்தியத் துடுப்பாட்ட வீரர்

அஜய்சின்ஹ்ஜி "அஜய்" ஜடேஜா Ajaysinhji "Ajay" Jadeja [1] (ஒலிப்பு பிறப்பு: பிப்ரவரி 1. 1971) இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1992 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார்.

அஜய் ஜடேஜா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஜய் ஜடேஜா
உயரம்5 அடி 10 அங் (1.78 m)
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கைபந்து வீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 196)நவம்பர் 13 1992 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுநவம்பர் 26 2000 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 85)நவம்பர் 28 1992 எ. இலங்கை
கடைசி ஒநாபசூன் 3 2000 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து மு.த.து ப.அ.து
ஆட்டங்கள் 15 196 109 291
ஓட்டங்கள் 576 5359 8046 8304
மட்டையாட்ட சராசரி 26.18 37.47 55.10 37.91
100கள்/50கள் 0/4 6/30 20/40 11/48
அதியுயர் ஓட்டம் 96 119 264 119
வீசிய பந்துகள் 0 1248 4703 2681
வீழ்த்தல்கள் 20 54 49
பந்துவீச்சு சராசரி 54.70 39.62 46.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/3 4/37 3/3
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 59/– 73/– 93/1
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 30 2008.

துடுப்பாட்ட சூதாட்டத்தினால் 5 ஆண்டுகள் விளையாடுவதற்கு இவருக்கு தடை விதிக்கப்பட்டது. பின் இந்தத் தடையானது சனவரி 27, 2007 இல் தில்லி உயர்நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டது. பின் உள்ளூர்ப் போட்டிகளிலும், சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலும் இவரை விளையாட அனுமதித்தது. 1990 களில் விரைவாக ஆட்டத்தினை முடித்து வைக்கும் ஆட்டத் திறமையால் இவர் பரவலாக அறியப்படுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

அஜய்சின்ஹ்ஜி அஜய் ஜடேஜா பிப்ரவரி 1,1971 இல் நவனகர் அரச குடும்பத்தில் பிறந்தார்.[2][3] கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி இவரின் உறவினர் ஆவார். இவரின் நினைவாகவே ரஞ்சிக் கோப்பை என்ற பெயர் வந்தது. மேலும் குமார் சிரி துலீப்சிங்ஜீ இவரின் உறவினர் ஆவார். இவரின் நினைவாகவே துலீப் கோப்பை எனும் பெயர் வந்தது. ஜடேஜா அதிதி ஜெட்லீ என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு அய்மன் மற்றும் அமீரா எனும் இரு குழந்தைகள் உள்ளனர்.

சர்வதேச போட்டிகள் தொகு

1992 முதல் 2000 வரையிலான ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார் இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 196 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவரின் காலகட்டத்தில் சிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பெங்களூரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 25 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த ஆட்டமே இவரின் மிகச் சிறந்த போட்டியாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் வக்கார் யூனிசு வீசிய இறுதி இரண்டு ஓவர்களில் 40 ஓட்டங்கள் எடுத்தார். இவரும் முகமது அசாருதீனும் இணைந்து சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக 4 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.மேலும் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 5 ஆவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர்.

சார்ஜா அமீரகத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஒரு ஓவரில் 3 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 3 இலக்குகள் எடுத்தார். இவர் 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு தலைவராக இருந்துள்ளார். சூன் 3, 2000 இல்பெப்சி ஆசியத் தொடரில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 93 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அதில் 8 நான்குகளும், 4 ஆறுகளும் அடங்கும்.

துடுப்பாட்டம் தவிர தொகு

2015 ஆம் ஆண்டில் புது தில்லி துடுப்பாட்ட சங்கத்தின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பின் இந்தப் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது இவர் துடுப்பாட்ட விளக்கவுரையாளராக உள்ளார்.

2003 ஆம் ஆண்டில் வெளியான கேல் எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார். இதில் சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மேலும் 2009 ஆம் ஆண்டில் வெளியான பல் பல் தில் கே சாத் எனும் திரைப்படத்தில் நடித்தார். இதனை வி.கே. குமார் இயக்கினார்.[4]

சான்றுகள் தொகு

  1. "Ajay Jadeja, Cricket players". ESPN Cricinfo.
  2. The Journal of Indo-judaic Studies, Volumes 1–4. Society for Indo-Judaic Studies. 1998. பக். 95. https://books.google.com/?id=a9wsAQAAIAAJ&q=ajay+jadeja+royal&dq=ajay+jadeja+royal. 
  3. "I am suffering irreparably: Ajay Jadeja". Times of India. 7 January 2003. http://timesofindia.indiatimes.com/city/pune-times/I-am-suffering-irreparably-Ajay-Jadeja/articleshow/33617885.cms. பார்த்த நாள்: 25 June 2013. 
  4. "Pal Pal Dil Ke Saath – The Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/movie-reviews/hindi/Pal-Pal-Dil-Ke-Saath/movie-review/4386725.cms. 

வெளியிணைப்புகள் தொகு

ஜடேஜா ஈஎஸ்பி என்

வார்ப்புரு:இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஒ.ப.து தலைவர்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜய்_ஜடேஜா&oldid=3728032" இலிருந்து மீள்விக்கப்பட்டது