அஞ்சுதா

மென்பொருள்

அஞ்சுதா (Anjuta) கட்டற்ற/திறந்த மூல மென்பொருள் வகையில் அமைந்த பலதரப்பட்ட சிறப்பம்சங்களையுடைய ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல் (Integrated Development environment -IDE) ஆகும். இது சி, சி++ போன்ற உயர்கணிணி மொழியில் நிரல் எழுதவும், குனோம் பணிச்சூழலுக்கான செயலிகளை கிளெடு(ஆங்கிலம்:glade) மூலம் உருவாக்கவும் உதவும் ஒருங்கிணைந்த உற்பத்திச்சூழல் ஆகும். இதன் மற்றசில உயர் சிறப்பம்சங்களாவன திட்ட மேலாண்மை (Project management), ஒருங்கிணைந்த கிளேடு பயனர் இடைமுகப்பு வடிவமைப்பி, பிழைதிருத்தி(Debuger), திறன்மிக்க நிரல் திருத்தி, நிரல் தேடல் மேலும் பல.[1][2][3]

அஞ்சுதா சின்னம்

அஞ்சுதா மணிப்பூரை சேர்ந்த நபகுமார் என்ற இந்தியரால் உருவாக்கப்பட்டு இன்று பலதரப்பட்ட குனோம் மென்பொருள் உருவாக்குனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா கட்டற்ற / திறந்த மென்பொருள் துறையில் எந்தவித பங்களிப்பையும் தரவில்லை பயனை மட்டுமே அனுபவிக்கிறது என்ற அவப்பெயரை நீக்கும் வகையில் இது போன்ற பல சிறந்த மென்பொருட்கள் தற்போது இந்தியரால் உருவாக்கப்பட்டுவருகிறது.

மற்ற சில கட்டற்ற / திறந்த ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழல்கள்

  1. எக்லிப்ஸ் (eclipse)
  2. நெட்பீன்ஸ் (netbeans)

அம்சங்கள் தொகு

அஞ்சுதாவின் அம்சங்கள்,

  1. பிழைதிருத்தி(Debuger)
  2. திறன்மிக்க நிரல் திருத்தி
  3. நிரல் தானியங்கு நிறைவு
  4. வழிகாட்டிகள்[4]
  5. நிரல் சிறப்பித்தல்

வெளிஇணைப்புகள் தொகு

அஞ்சுதா ஒருங்கிணைந்த உருவாக்குதல்சூழலின் இணையமுகவரி

மேற்கோள்கள் தொகு

  1. Stiebert, Julius (12 March 2008). "Gnome 2.22 mit Desktop-Effekten" (in ஜெர்மன்). Golem.de. பார்க்கப்பட்ட நாள் 23 February 2012.
  2. "Archived Anjuta project homepage". 2022-11-07.
  3. "Archival Notice".
  4. Ganslandt, Björn, "GNOME Fifth-Toe 1.4 » LinuxCommunity", LinuxCommunity (in ஜெர்மன்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-15
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சுதா&oldid=3752068" இலிருந்து மீள்விக்கப்பட்டது