மேலும் தகவல்களுக்கு: அணிலாடி ஊராட்சி

அணிலாடி கிராமம், இந்தியாவில், தமிழ்நாட்டில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் அமைந்துள்ளது. செஞ்சி மற்றும் திண்டிவனத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.[1] இந்த கிராமத்தில் இந்து மற்றும் கிறித்தவ மதத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இந்த ஊரில் புகழ் பெற்ற தூய இதய ஆண்டவர் ஆலயம் அமைந்துள்ளது.[2] அணிலாடி கிராமம் எரம்பட்டு, கொட்டாரம் மற்றும் அணிலாடியை உள்ளடக்கியதாகும். பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

பள்ளி மற்றும் மருத்துவமனைகள் தொகு

இந்த ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளியும், தூய இதய மேனிலைப்பள்ளியும் (Sacred Heart Higher Secondary School) அமைந்துள்ளன. ஒரு அரசு சுகாதார நிலையமும், தனியார் மருத்துவமனையும் உள்ளன.

போக்குவரத்து தொகு

அணிலாடி கிராமத்திற்கு செஞ்சி, திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் இருந்து நேரடிப் பேருந்து போக்குவரத்து உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகும். அருகிலுள்ள விமான நிலையம் சென்னை ஆகும்.

தொழில் தொகு

இங்குள்ள மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாகக் கொண்டுள்ளனர். இவ்வூரில் ஆசிரியர்களும், ராணுவத்தினரும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர்.

சான்றுகள் தொகு

  1. "அணிலாடி கிராமத்தினர் மறியல் செய்ய முடிவு". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
  2. "அணிலாடி தூய இதய ஆண்டவர் ஆலயப் பெருவிழா கொடியேற்றம்". பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிலாடி&oldid=3867448" இலிருந்து மீள்விக்கப்பட்டது