அண்ணவெலும்பு


அண்ணவெலும்பு (ஆங்கிலம்:Palatine bone) முகவெலும்புகளில் உள்ள இரு எலும்புகளாகும். இது மேல்தாடை எலும்புகளுடன் இணைந்து அண்ணத்தை உருவாக்குகிறது.[1][2]

அண்ணவெலும்பு
அண்ணவெலும்பு அமைவிடம்
அண்ணவெலும்பு அமைவிடம்
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Os palatinum
TA98A02.1.13.001
TA2798
FMA52746
Anatomical terms of bone

அமைப்பு தொகு

அண்ணவெலும்பு இரு மேல்தாடை எலும்புகளுடன் இணைந்து நசிப்பள்ளத்தின் தளத்தை உருவாகுகிறது. இது வாயின் கூரையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அண்ணவெலும்பும் ஆங்கில எழுத்தான L வடிவம் கொண்டது. அண்ணவெலும்பு 6 எலும்புகளுடன் இணைந்துள்ளது. மண்டையோடு எலும்புகளான நெய்யரியெலும்பு மற்றும் ஆப்புரு எலும்பு எலும்புடன் இணைந்துள்ளது. முகவெலும்புகளான மேல்தாடை எலும்பு, கீழ்மூக்கு சங்கெலும்பு, மூக்குச்சுவர் எலும்பு மற்றும் எதிர்பக்க அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. OED 2nd edition, 1989.
  2. Entry "palatine" in Merriam-Webster Online Dictionary.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணவெலும்பு&oldid=3679633" இலிருந்து மீள்விக்கப்பட்டது