அண்ணீரகச் சுரப்பி

அண்ணீரகச் சுரப்பி (Adrenal gland) (தமிழக வழக்கு: அட்ரீனல் சுரப்பி அல்லது அதிரீனல் சுரப்பி) என்பது, சிறுநீரகத்தின் மேல் இருக்கும் முக்கோண வடிவான அகச்சுரப்பி ஆகும். இது நாளமில்லாச் சுரப்பி ஆகும். இவை ஒவ்வொரு சிறுநீரகத்துக்கும் மேற்புறத்தில் ஒன்று வீதம் வலது, இடமாக இருபுறமும் அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும் இரு பகுதிகளைக் கொண்டுள்ளன. உட்புறப்பகுதிக்கு அகணி என்று பெயர். வெளிப்புறப் பகுதிக்கு புறணி என்பது பெயர். இச்சுரப்பியின் எடை 12 கிராம்களாகும். அட்ரீனல் அகணியிலிருந்து அட்ரீனலின் மற்றும் நார் அட்ரீனலின் என்ற இருவகை இயக்குநீர்கள் சுரக்கின்றன. புறணியிலிருந்து 'ஸ்டீராய்ட்ஸ்' (Steroids) என்னும் இயக்குநீர்கள் சுரக்கின்றன. இவை நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இவற்றின் முக்கிய பணி இழையங்களைத் தூண்டுவதும், உடம்பின் வளர் சிதைமாற்றத்தைச் சீராக நடைபெறச் செய்வதும் ஆகும். இச்சுரப்பியிலிருந்து ஈத்திரோசன், புரோஜெஸ்ட்ரான் இயக்குநீர்களும் மிகச் சிறிய அளவில் சுரக்கின்றன.[1] கார்ட்டிசால், எபிநெப்ரின் ஆகியவற்றை உள்ளடக்கிய கார்ட்டிகோஸ்டெரோய்டுகள், கட்டெகோலமைன்கள் என்பவற்றை உற்பத்தி செய்வதன்மூலம், நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளை நெறிப்படுத்துவதே இதன் முக்கிய பொறுப்பு ஆகும்.[2]

அண்ணீரகச் சுரப்பி
மனிதச் சிறுநீரகத்தின் மேல் முனையில் மஞ்சள் நிறத்தில் காட்டப்பட்டுள்ள உறுப்பே அண்ணீரகச் சுரப்பி
அதிரெனல் சுரப்பி
இலத்தீன் glandula suprarenalis
கிரேயின்

subject #277 1278

தொகுதி அகச்சுரப்பி
தமனி அண்ணீரக மேல்தமனி, அண்ணீரக நடுத்தமனி, அண்ணீரகக் கீழ்த்தமனி
சிரை அண்ணீரகச் சிரைகள்
நரம்பு celiac plexus, renal plexus
நிணநீர் கீழ்முதுகுச் சுரப்பிகள்
ம.பா.தலைப்பு Adrenal+Glands
Dorlands/Elsevier g_06/12392729

மேற்கோள்கள் தொகு

  1. இளையர் அறிவியல் களஞ்சியம், மணவை முஸ்தபா, 1995, பக்கம் 11-12
  2. டாக்டர் கு. கணேசன் (18 சூலை 2018). "அண்ணீரகச் சுரப்பிகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணீரகச்_சுரப்பி&oldid=3576409" இலிருந்து மீள்விக்கப்பட்டது