அதிரியான் கெளசானல் அடிகளார்

ஐரோப்பியக் கண்டத்திலுள்ள பிரான்சு நாட்டில் பிறந்து கிறித்தவ மத மறையைப் பரப்ப இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு வந்து தமிழுக்காகவும், சமூக நீதிக்காகவும், தலித் மக்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவர்களுள்அருட்தந்தை அதிரியான் கெளசானல் அடிகளாரும் ஒருவராவார்.

பிறப்பு தொகு

பிரான்சு தேசத்தில் ரோடஸ் மறைமாவட்டத்தில் 1850 ஆம் ஆண்டு பிறந்த இவர். சேசு சபை குருவாக பணியாற்ற 1888 ஆம் ஆண்டு தமிழக மண்ணிற்கு வந்தார். தூத்துக்குடியில் 1890 ஆம் ஆண்டு மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்ற அதிரியான் கெளசானல் அடிகளார், வடக்கன்குளம், கள்ளிகுளம் போன்ற பகுதிகளில் மத பரப்புரையோடு, கல்வி, சமூக முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அந்த காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதிய ரீதியான ஏற்றத்தாழ்வை அகற்றி, சமத்துவ நிலை தொடர தொடர்ச்சியாக பாடுபட்டுள்ளார்.

சமூக செயற்பாடுகள் தொகு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய குன்றுகளால் சூழப்பட்டுள்ள இருதயகுளம் என்ற கிராமம். முன்னதாக உச்சங்குளம் (உச்சன்குளம் என்றால் “பெரிய மனிதனின் குளம்” என்பது பொருள்) என்று அழைக்கப்பட்டது. அப்பகுதியில் கெளசானல் அடிகளார்களால் திரு இருதய சகோதரர் சபையை ஏற்படுத்தியதன் காரணமாக உச்சங்குளம் என்ற பகுதி இருதயகுளமாக மாற்றப்பட்டுள்ளது. [1]

கிறிஸ்தவ ஆன்மீகத்தை அதன் சரியான பொருளில் நடைமுறைப்படுத்திய அதிரியன் கௌசானல் அடிகளார், 1910 ஆம் ஆண்டுவாக்கில் கள்ளிகுளத்திலும் பங்குத் தந்தையாகப் பணியாற்றியுள்ளார். தற்போதும் கள்ளிகுளத்தில், கௌசானல் அடிகளார் பெயரில் ஒரு மருத்துவமனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது பெயரால் தொடங்கப்பட்ட கல்லூரியைத் தொடர்ந்து நடத்தும் அளவிற்கு அவ்வூர் மக்களின் நிதி நிலைமை இடமளிக்கவில்லை. [2] அதனால், கல்லூரி திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. அதுவரை அக்கல்லுரிக்காக திரட்டியிருந்த பணம், நிலம், கட்டடம் அனைத்தும், அச்சங்கத்திற்கு, ஊர் மக்களால் நன்கொடையாக வழங்கப் பட்டது. இன்று, திருநெல்வேலி தட்சண மாற நாடார் சங்க கல்லூரி (TDMNS) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. வடக்கன்குளம் தேவாலயத்தின் வெள்ளாளர், நாடார் சமூக மக்களிடையே இருந்த தீண்டாமைச் சுவரை இடித்ததில் கௌசானல் அடிகளின் பங்கு அளப்பரியதாகும். இவரால் “இயேசுவின் திரு.இருதய சகோதரர் சபை” என்ற பெயரில் ஒரு துறவறசபையும் அமைக்கப்பட்டுள்ளது.

இறப்பு தொகு

1930 ஆம் ஆண்டு கௌசானல் அடிகளார் மரணித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "நமது திருச்சபையின் வரலாறு".
  2. "அது ஒரு கல்லூரிக் காலம்".