அத்திரி

(அத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அத்ரி, ரிக் வேத கால முனிவர்களில் ஒருவராவார். இவர் பிரம்மனின் மகன் என்றும் பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் கூறுவர். இவரது மகன்களில் புகழ்பெற்றவர்கள் துர்வாசர் & தத்தாத்ரேயர் ஆவார். சப்தரிஷிகள் எனப்படும் ஏழு முனிவர்களில் இவரும் ஒருவர். இவரது மகன்கள் பலர் ரிக் வேதத்தைத் தொகுத்து உதவினர் என்று புராணங்கள் கூறுகின்றன.[1] இவரது மனைவி அனுசுயா தேவி ஆவார்.

பிரம்மரிஷி அத்திரி
அத்திரி முனிவருடன் இராமன் & இலக்குமணன் உரையாடுதல் , சீதையுடன் அத்திரி முனிவரின் மனைவி அனுசுயா உரையாடுதல்
தகவல்
துணைவர்(கள்)அனுசுயா
பிள்ளைகள்துர்வாசர், தத்தாத்ரேயர், சந்திரன்

இராமாயணத்தில் தொகு

14 ஆண்டு வனவாசத்தின் போது, சீதை மற்றும் இலக்குமணர்களுடன், இராமன் சித்திரகூடத்தில் உள்ள அத்திரி - அனுசுயா இணையர்களின் ஆசிரமத்திற்குச் சென்றனர்.[2] சீதைக்கு அனுசுயா தேவி தனது நகைகளை சீதைக்கு அணிவித்து மகிழ்ந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Antonio Rigopoulos (1998). Dattatreya: The Immortal Guru, Yogin, and Avatara. State University of New York Press. pp. 2–4. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3696-7.
  2. Roshen Dalal (2010). Hinduism: An Alphabetical Guide. Penguin Books. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-341421-6.
  3. Alf Hiltebeitel (2016). Nonviolence in the Mahabharata: Siva’s Summa on Rishidharma and the Gleaners of Kurukshetra. Routledge. pp. 55–56, 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-317-23877-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திரி&oldid=3752594" இலிருந்து மீள்விக்கப்பட்டது