அந்தக் கழுதை இந்தக் கழுதை

அந்தக் கழுதை இந்தக் கழுதை என்பது தாய்மார் அல்லது தலைவர்-ஒருவர் குழந்தையின் கண்ணைப் பொத்தி ஆளைக் காட்டச் சொல்லும் விளையாட்டு.

பொத்துபவர் பாடும் உரைப்பாட்டு தொகு

அந்தக் கழுதை, இந்தக் கழுதை
மல்லிகா (விளையாடுவோரில் ஒருவர் பெயராக இருக்கும்) கழுதை
எங்கே போயிற்று

கண் பொத்தப்பட்டிருக்கும் குழந்தை மல்லிகா போன திசையைக் காட்டவேண்டும். காட்டிய திசை சரி ஆயின் மல்லிகா கண் பொத்தப்படும். தவறு ஆயின் மீண்டும் பொத்தப்பட்டவர் கண்ணே பொத்தப்படும். இவ்வாறு ஆட்டம் தொடரும்.

மேலும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  • இரா பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை வெளியீடு, 1980