அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இசை

அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதியாகும். இப்பகுதியின் நாட்டுப்புற மரபுகளில் மோகென் என்ற பழங்குடியின கடற்பயணிகளின் பல்வேறு வகையான சடங்குகள் மற்றும் பழங்குடி நடனம் ஆகியவை அடங்கும்.

அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரம், தீவில் குடியேறியவர்களின் பூர்வீக கலாச்சாரங்களின் கலவையையும், இந்திய நிலப்பரப்பில் இருந்து தீவில் ஆரம்பகாலத்தில் குடியேறியவர்களின் சந்ததியினரால் கொண்டு வரப்பட்ட ஒரு முக்கிய கலாச்சாரத்தையும் காட்டுகிறது. புலம்பெயர்ந்தோர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கலாச்சாரத்திற்கும் பங்களித்தனர். அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகப்பெரிய அம்சம் இந்த இரண்டு கலாச்சார வாழ்க்கையின் அமைதியான சகவாழ்வு ஆகும்.

நிகோபரி நடனம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் பழங்குடியினரின் கலாச்சார வடிவங்கள் தொகு

அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் மிகவும் தனித்துவமான அம்சம் தீவுகளின் பழங்குடி மக்களின் கலாச்சாரம் ஆகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுவாசிகளை இரண்டு பெரிய குழுக்களாக பிரிக்கலாம். அந்தமானின் முக்கிய இனக்குழுக்கள் அந்தமானீசு, ஓங்கே, சாரவா மற்றும் சென்டினலீசு. நிக்கோபார் பழங்குடியினரின் முக்கிய குழுக்கள் நிக்கோபரி (நிகோபரீசு) மற்றும் சோம்பென். தீவுவாசிகள் துர்கா பூசை, பொங்கல், பங்குனி உத்திரம், ஓணம், மகாசிவராத்திரி, சனமாசுடமி, கோலி, தீபாவளி, கிறிசுதுமசு மற்றும் புனித வெள்ளி போன்ற பெரும்பாலான இந்திய பண்டிகைகளை நடனம் மற்றும் இசையுடன் கொண்டாடுகிறார்கள். நிக்கோபரி நடனம் அந்தமான் மற்றும் நிக்கோபார் மக்களின் பாரம்பரிய நடனமாகும். பொதுவாக பன்றித் திருவிழா என்று அழைக்கப்படும் ஓசுவரி விழாவின் போது இதைக் காணலாம். அந்தமானியர்கள் தங்கள் பாரம்பரிய இசையை விரும்புகிறார்கள். நடனக் கலைஞர்கள் ஓங்கே பழங்குடியினரின் இசை மற்றும் பாடலுக்கு அழகாக நகர்கிறார்கள்.

இந்த பழங்குடியினர் அனைவரும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் தங்கள் பூர்வீக கலாச்சாரத்தை தொடர்ந்துள்ளனர், இன்னும், தொடர்ந்து செய்கின்றனர். இந்த பழங்குடியினரின் ஒப்பீட்டளவில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் கலாச்சாரத்தின் இந்த நீரோடைகளைப் பாதுகாக்க உதவியது.