அனுராதா ரமணன்

அனுராதா ரமணன் (Anuradha Ramanan) (ஜூன் 29, 1947 – மே 16, 2010)[1] தமிழ்நாட்டில் வாழ்ந்த எழுத்தாளர். புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவற்றுள் சில தொலைக்காட்சித் தொடர்களாகவும் திரைப்படங்களாகவும் வெளிவந்திருக்கின்றன. இவரது படைப்புகள் சில தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.

அனுராதா ரமணன்
பிறப்பு(1947-06-29)29 சூன் 1947
தஞ்சாவூர், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 மே 2010(2010-05-16) (அகவை 62)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தொழில்
  • எழுத்தாளர்
  • ஓவியர்
  • சமூக செயற்பாட்டாளர்
காலம்1977—2010

வாழ்க்கைக் குறிப்பு தொகு

அனுராதா தமிழ்நாட்டிலிலுள்ள தஞ்சாவூரில் 1947ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் தன் தாத்தாவும் நடிகருமான ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் எழுத்தாளரானார்.[2] இவர் கணவர் ரமணன்[3]. இவர்களுக்கு சுதா, சுபா என்னும் இரண்டு மகள்கள் உள்ளனர்.[4]

ஓவியக்கலைஞரான அனுராதா 'மங்கை’ இதழில் தொடக்கத்தில் பணியாற்றினார். 1977ஆம் ஆண்டில் மங்கை இதழில் இவரது எழுத்து முதன்முதலாக வெளிவந்தது.[2]

இலக்கியப் பணி மட்டுமின்றி விவாகரத்துக்கோரும் தம்பதியருக்கு சேர்ந்துவாழ ஆலோசனை வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்[5]

படைப்புகள் தொகு

30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 365 நெடுங்கதைகளையும் 480 சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.[6]

நெடுங்கதைகள் தொகு

  1. அனுபவ அலைகள்
  2. ஆசைக்கிளியே அழகியராணி
  3. ஆடும்வரை ஆட்டம்
  4. இந்த இதழில் ஆரம்பமாகிறது
  5. இந்த நிலா சுடும்
  6. இந்த மனம் உனக்காக
  7. இப்படிக்கு நன்றியுடன்
  8. இம்சைகள்
  9. உறவுகள்
  10. உறவைத்தேடும் பறவை
  11. ஊமை மனிதர்கள்
  12. எப்போதும் நீ
  13. ஒரு வீடு இரு வாசல்
  14. ஓவியம்
  15. கண்ணா உன்னை மறப்பேனா?
  16. கண்ணே காத்திரு!
  17. கற்பனைக் கதைகள்
  18. கற்பூரக்காற்று
  19. கனவுகள் கோடி
  20. கனவுக்காதலன்
  21. கனவோடு சில நாள்
  22. காதல் கைதி
  23. காதல்நேரம்
  24. காதலுக்கு ஒரு(த்)தீ
  25. காதோடு ஒரு காதல் கதை
  26. காதோரம் ஒரு கவிதை
  27. கூட்டுக்குள்ளே சில காலம்
  28. கூட்டுப்புழுக்கள்
  29. சந்திப்பு தொடரும்
  30. சாதாரண மனிதர்கள்
  31. சொந்தமென நீ இருந்தால்
  32. தரையில் நீந்தும் மீன்கள்
  33. தனம்
  34. தேவை ஒரு சினேகிதி
  35. தொட்டதெல்லாம் பெண்
  36. நாயகன் நாளை வருவான்
  37. நாள் முழுக்க நாடகம்
  38. நித்தம் ஒரு நிலா
  39. நிழலுக்கு ஏங்கும் மரங்கள்
  40. நீயும் நானும் ஒரு வீடும் . . .
  41. நீயும் நானும் நினைத்தால்
  42. நெருப்புடன் உறவு
  43. நேற்றுவரை நந்தவனம்
  44. புவனா என்னும் புயல்
  45. மலரோடு தனியாக
  46. மழைக்கால மல்லிகைகள்
  47. மாலைநேரக் கனவுகள்
  48. மாலையில் சொல்கிறேன் வா
  49. மிதலை நகரத்தின் சீதைகள்
  50. மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்
  51. முதல் காதல்
  52. முள்ளோடு ஒரு ரோஜா
  53. மோகமழை
  54. வாசல் வரை வந்தவள்
  55. வெல்வெட் மனசு
  56. வெள்ளிக்கனவு

சிறுகதைகள் தொகு

  1. சிறை

மதிப்பீடு தொகு

அவரது கதைகள் பெரும்பாலும் குடும்பத்தையும் அன்றாட நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டிருந்தன.

பரிசு தொகு

ஆனந்த விகடனில் வெளியான அவரது சிறுகதை ’சிறை’, சிறந்த சிறுகதைக்கான தங்கப்பதக்கம் வென்றது.[3] அதனை 1978 ஆம் ஆண்டு எம். ஜி. ஆரிடம் இருந்து பெற்றார்.[3]

திரைப்படங்களான கதைகள் தொகு

சிறை சிறுகதை அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது.[3]

கூட்டுப்புழுக்கள், மலரின் பயணம், ஒரு வீடு இருவாசல் ஆகிய நெடுங்கதைகள் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டன.[2] அவற்றுள் கே. பாலசந்தர் இயக்கிய ஒரு வீடு இரு வாசல் திரைப்படம் பிற சமூக சிக்கல்கள் மீதான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை 1991 இல் பெற்றது.[7] இவரது கதையைக் கொண்டு 1988 இல் வெளியான ஒக்க பாரிய கதா (ஒரு மனைவியின் கதை) என்ற தெலுங்குத் திரைப்படம் ஐந்து நந்தி விருதுகளை வென்றது.[8] இவரது மற்றொரு கதை மிதிலேயி சீதையரு (மிதிலையில் ஒரு சீதை) என்னும் பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. <re>[2]</ref>

தொலைக்காட்சித் தொடர்களான கதைகள் தொகு

அர்ச்சனைப் பூக்கள், பாசம், கனாக்கண்டேன் தோழி ஆகிய இவரது கதைகள் தொலைகாட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.[3]

விருது தொகு

  1. தமிழ்நாடு காங்கிரஸ் கழக‌ம் வழங்கும் சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது [4]

சர்ச்சைகள் தொகு

காஞ்சி சங்கரமட பீடாதிபதியான செயந்திர சரசுவதி தன்னிடம் பாலியல் ரீதியாக முறைகேடாக நடந்துகொண்டதாகக் அனுராதா ரமணன் ஊடகவியலாளர் சந்திப்பில் குற்றம்சாட்டினார். சங்கரமடத்தின் சார்பில் ஒரு பக்தி பத்திரிகை துவங்கப்போவதாகக் கூறி, தான் அழைக்கப்பட்டதாகவும் அப்போது தனிமையில் தன்னிடம் ஆபாசமாக பேசிய ஜெயேந்திர சரஸ்வதி முறைகேடாக நடக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.[9] இதனால் அதிரச்சியடைந்த தான் உடனே அங்கிருந்து வெளியேறியதாகவும். பின்னர் இதை மையமாக கொண்டு ஒரு வார இதழில் தொடர் ஒன்று எழுதியதாகவும் கூறினார்.[10]

இறப்பு தொகு

மே 16, 2010 இல் மாரடைப்பால் சென்னையில் தனது 62 வது அகவையில் இவர் மரணமடைந்தார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "Noted writer Anuradha Ramanan passes away". Zee News. பார்க்கப்பட்ட நாள் 17 August 2013.
  2. 2.0 2.1 2.2 "Popular Tamil writer Anuradha Ramanan dead". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 17 May 2010. http://newindianexpress.com/states/tamil_nadu/article271406.ece?commentId=103962. பார்த்த நாள்: 17 August 2013. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Anuradha Ramanan dead". தி இந்து. 17 May 2010 இம் மூலத்தில் இருந்து 20 மே 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100520013745/http://www.hindu.com/2010/05/17/stories/2010051756100500.htm. பார்த்த நாள்: 17 August 2013. 
  4. 4.0 4.1 வெப்துனியா தமிழ், 17 மே 2010
  5. "Saadhanai Penn – Anuradha Ramanan". தி இந்து. 21 November 2003 இம் மூலத்தில் இருந்து 26 நவம்பர் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031126201738/http://www.hindu.com/fr/2003/11/21/stories/2003112101060800.htm. பார்த்த நாள்: 17 August 2013. 
  6. [1]
  7. "38th National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. Archived from the original (PDF) on 15 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 August 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Noted writer dead". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 16 May 2010 இம் மூலத்தில் இருந்து 17 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130817190543/http://www.hindustantimes.com/India-news/Chennai/Noted-writer-dead/Article1-544558.aspx. பார்த்த நாள்: 17 August 2013. 
  9. "சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  10. Akhilan, Mayura (2018-02-28). "சர்ச்சைகளுடன் வாழ்ந்து மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்". tamil.oneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_ரமணன்&oldid=3751889" இலிருந்து மீள்விக்கப்பட்டது