அபிமன்யு (மகாபாரதம்)

மகாபாரத கதை மாந்தர்

அபிமன்யு மகாபாரதக் கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார்.அபிமன்யு - உத்தரை தம்பதியர்க்கு பிறந்தவர் பரிட்சித்து.

அபிமன்யு
அரசிஉத்தரை
முழுப்பெயர்
அபிமன்யு
மரபுகுருவம்சம்
அரச குலம்சந்திர குலம்
தந்தைஅர்ஜுனன்
தாய்சுபத்திரை
இறப்புகுருச்சேத்திரம்
சமயம் இந்து
அபிமன்யு போரிடுமுன் விராடன் மகள் உத்தரையிடமிருந்து விடைபெறும் காட்சி

அபிமன்யு தனது இளமைப்பருவத்தைத் தனது தாயின் ஊரான துவாரகையில் கழித்தான். இவர் தனது மாமன்களான கிருஷ்ணன் மற்றும் பலராமனிடம் போர்ப்பயிற்சி பெற்றார். பின்னர் இவனுக்கும் விராட மன்னனின் புதல்வி உத்தரைக்கும் திருமணம் நடந்தது. இவர் இந்திரனுடைய பேரன் ஆகையால் நிறைய வரங்கள் பெற்றிருந்தான். வில்வித்தையில் மிகச்சிறந்த வீரனாகவும் திகழ்ந்தான்.

குருச்சேத்திரப் போரின் பதின்மூன்றாவது நாளில் கௌரவர்கள் சக்கரவியூகம் அமைத்துப் போரிட்டனர். இதனுள் சென்று கடும்போர் புரிந்த அபிமன்யு, சக்கரவியுகத்திலிருந்து வெளிவர தெரியாதபடியால் எதிரிகளின் வாளுக்குப் பலியானான். துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிரஹத்பாலன், கிருதவர்மன் ஆகிய அறுவரால் தாக்கபட்டு நிலைகுலையும் அபிமன்யு, பின் துச்சாதனனின் மகன் துர்முகனோடு கதாயுத்தம் புரிந்து அவனைக் கொன்று தானும் மரணத்தைத் தழுவுகிறார். [1][2]

மேலும் சக்கரவியூகத்தில் அருச்சுனன் தவிர்த்த மற்ற பாண்டவர்களை உட்புக இயலாதபடி, ஜெயத்திரதன் ஒருவனாக தடுத்துவிட்டான். இதனால் அபிமன்யுவின் மரணத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய ஜெயத்திரதனை மறு நாள் போரில் கொல்வதாக அருச்சுனன் கொல்வதாக சபதம் ஏற்கிறான்.

மேற்கோள்கள் தொகு

  1. Abhimanyu (Mahabharata)
  2. http://www.mahabharataonline.com/rajaji/mahabharata_summary_81.php
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிமன்யு_(மகாபாரதம்)&oldid=3801522" இலிருந்து மீள்விக்கப்பட்டது