அபு சயித் பகதூர் கான்

ஈல்கானரசின் ஒன்பதாவது ஆட்சியாளர்

அபு சயித் பகதூர் கான் (சூன் 2, 1305 – திசம்பர் 1, 1335) (பாரசீகம், அரபு மொழி: ابو سعید بہادر خان ) என்பவர் மங்கோலியப் பேரரசின் ஒரு பிரிவான ஈல்கானரசின் ஒன்பதாவது ஆட்சியாளர் ஆவார். இவர் அபு சயித் பகதூர் (மொங்கோலியம்: ᠪᠦᠰᠠᠢ ᠪᠠᠬᠠᠲᠦᠷ ᠬᠠᠨ, புசயித் பகதூர் கான், Бусайд баатар хаан / புசயித் பாதர் கான், நவீன மங்கோலியம்: ˈbusæt ˈbaːtər xaːŋ) என்றும் அழைக்கப்படுகிறார். இவரது அரசு தற்போதைய ஈரான், அசர்பைஜான், சியார்சியா மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளையும், ஈராக்கு, துருக்கி, ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கி இருந்தது.

ஆளுமை தொகு

இப்னு பதூதாவின் கூற்றுப்படி, "கடவுளின் படைப்புகளிலேயே மிகுந்த அழகுடையவர்களில் ஒருவராக" அபு சயித் இருந்தார். கலாச்சாரத்தின் மீது ஈடுபாடுடைய ஆட்சியாளரான இவர், கவிதை மற்றும் இசை ஆகிய இரண்டையுமே இயற்றிய ஒரே ஈல்கானாகத் திகழ்ந்தார்.[1]

உசாத்துணை தொகு

  1. "ABŪ SAʿĪD BAHĀDOR KHAN – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபு_சயித்_பகதூர்_கான்&oldid=3478046" இலிருந்து மீள்விக்கப்பட்டது