அப்துல் குரி சிட்டுக்குருவி

பறவை இனங்கள்

அப்துல் குரி சிட்டுக்குருவி (Abd al-Kuri sparrow)(பாசர் கெமிலியூகசு) என்பது ஆப்பிரிக்காவின் கொம்புக்கு அப்பால், இந்தியப் பெருங்கடலின் சுகுத்திரா தீவுக்கூட்டத்தில் உள்ள அப்துல் குரி (வேறு பல வழிகளிலும் உச்சரிக்கப்படுகிறது) என்ற சிறிய தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.

அப்துல் குரி சிட்டுக்குருவி
பெண் குருவி (மேலே) & ஆண் குருவி (கீழே) படம் கென்றிக் குரோன்வோடு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. hemileucus
இருசொற் பெயரீடு
Passer hemileucus
ஓசில்வை & போர்ப்சு, 1900
அப்துல் குரி சிட்டுக்குருவி பரவல்

விளக்கம் தொகு

அப்துல் குரி சிட்டுக்குருவி, முதலில் ஒரு தனித்துவமான சிற்றினமாக விவரிக்கப்பட்டாலும், இது சொகோட்ரா சிட்டுக்குருவியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.[2] கை கிர்வானின் ஆய்வில் சொகோட்ரா சிட்டுக்குருவியிலிருந்து குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்றும், இரண்டு சிட்டுக்குருவிகளும் வெவ்வேறு தோற்றம் கொண்டவையாக இருக்கலாம் அறியப்பட்டது.[3] இது உருவவியல் ரீதியாக வேறுபட்டது என்பதற்கான சான்றுகளின் அடிப்படையில், பன்னாட்டுப் பறவை வாழ்க்கை அமைப்பு (மேலும் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க சிவப்பு பட்டியல்) இதை ஒரு சிற்றினமாக அங்கீகரித்தது.[4][5] மேலும் இது திசம்பர் 2009 முதல், பன்னாட்டு பறவையியல் மாநாட்டின் உலக பறவை பட்டியலில் பட்டியலிடப்பட்டது.

நிலை தொகு

அப்துல் குரி சிட்டுக்குருவி, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட பரவல் மற்றும் 1,000 எண்ணிக்கைக்கும் குறைவான மக்கள்தொகையினைக் கொண்டது. எனவே அறியப்பட்ட அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டாலும் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகக் கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Passer hemileucus". IUCN Red List of Threatened Species 2016: e.T22735599A95115321. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735599A95115321.en. https://www.iucnredlist.org/species/22735599/95115321. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Summers-Smith 1988
  3. Kirwan, Guy M. (2008). "Studies of Socotran Birds III. Morphological and mensural evidence for a 'new' species in the Rufous Sparrow Passer motitensis complex endemic to the island of Abd 'Al Kuri, with the validation of Passer insularis Sclater & Hartlaub, 1881". Bulletin of the British Ornithologists' Club 128 (2): 83–93. 
  4. Gill, F.; Donsker, D., eds. (10 July 2011). "Species Updates – IOC Version 2.3". IOC World Bird List Version 2.9. Archived from the original on 24 July 2011. பார்க்கப்பட்ட நாள் 8 August 2011.
  5. 5.0 5.1 BirdLife International (2010). "Species factsheet: Passer hemileucus". பார்க்கப்பட்ட நாள் 24 June 2010.

மேற்கோள் நூல்கள் தொகு