அப்துல் சத்தார் எதி

அப்துல் சத்தார் எதி (ஆங்கிலம் : Abdul Sattar Edhi) உருது: عبدالستار ایدھی; 28 ) பிறப்பு 1928 பிப்ரவரி 28 [7] - 2016 சூலை 8) [8] பாக்கித்தானின் நன்கொடையாளர், சந்நியாசி மற்றும் மனிதாபிமானம் கொண்டவருமான இவர், உலகின் மிகப்பெரிய தன்னார்வ முதலுதவி வண்டி வலையமைப்பை இயக்கும் எதி அறக்கட்டளையை நிறுவியவர் ஆவார்.[9] இவரது மரணத்திற்குப் பிறகு, எதி அறக்கட்டளையால் நிறுவகிக்கப்படும் பாக்கித்தான்]] முழுவதும் உள்ள வீடற்ற மனிதர்களுக்கான காப்பகம், விலங்குகள் காப்பகம், மறுவாழ்வு மையங்கள் மற்றும் அனாதை இல்லங்கள் போன்றவற்றை அவரது மகன் பைசல் எதி நடத்தி வருகிறார்.

NI லெனின் அமைதிப் பரிசு, காந்தி அமைதி விருது
அப்துல் சத்தார் எதி
عبدالستار ایدھی
2009 இல் எதி
பிறப்புசட்டேர்
(1928-02-28)28 பெப்ரவரி 1928 பன்த்வா, பிரித்தானிய இந்தியா
இறப்பு8 சூலை 2016(2016-07-08) (அகவை 88)
கராச்சி, பாக்கித்தான்
கல்லறைஎதி கிராமம், கராச்சி
தேசியம்பாகிஸ்தானியர்
மற்ற பெயர்கள்கருணையின் தேவதை[1]
பணக்கார ஏழை மனிதன்[2]
[3]بابائے خدمت
அறியப்படுவதுசமூகப்பணி
எளிய வாழ்முறை
மனித நேயம்[4]
வாழ்க்கைத்
துணை
பில்கிஸ் எதி
விருதுகள்லெனின் அமைதிப் பரிசு (1988)
நிசான் - இ - இம்தியாஸ் (1989)
[5][6]
வலைத்தளம்
அதிகாரப்பூர்வ இணையதளம்

1928 இல் இந்தியாவின் குசராத்தின் பன்த்வாவில் பிறந்த எதி பின்னர் கராச்சிக்கு குடிபெயர்ந்தார். அங்கு கராச்சியின் குறைந்த வருமானத்தில் வசிப்பவர்களுக்கான ஒரு இலவச மருந்தகத்தை நிறுவினார். 1957-ஆம் ஆண்டில் கராச்சி வழியாக ஒரு ஆசிய காய்ச்சல் தொற்றுநோய் பரவியபோது எதியின் தொண்டு நடவடிக்கைகள் விரிவடைந்தன. அதே ஆண்டில் தனது முதல் முதலுதவி வண்டி வாங்க நன்கொடைகள் கிடைத்தன. பின்னர் இவர் தனது மனைவி பில்கிஸ் எதியின் உதவியுடன் தனது தொண்டு வலையமைப்பை விரிவுபடுத்தினார்.[10][11]

இவரது வாழ்நாளில், எதி அறக்கட்டளை விரிவடைந்தது. மேலும், அது முற்றிலும் தனியார் நன்கொடைகளால் ஆதரிக்கப்பட்டது. இதில் 1,800 சிறிய வாகன முதலுதவி வண்டி வலையமப்பை நிறுவுவதும் அடங்கும். எதி இறக்கும் போது, கிட்டத்தட்ட 20,000 குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலராக பதிவு செய்யப்பட்டார். இவர் ஏஞ்சல் ஆஃப் மெர்சி என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இவர் பாக்கித்தானின் "மிகவும் மரியாதைக்குரியவர்" என்றும் மற்றும் புகழ்பெற்ற நபராகவும் கருதப்படுகிறார்.[12] 2013 ஆம் ஆண்டில், தி ஹஃபிங்டன் போஸ்ட் அவர் "உலகின் மிகப் பெரிய மனிதாபிமானம்" என்று கூறியது.[13]

எதி ஒரு கைகூடும் மேலாண்மை பாணியைப் பராமரித்தார். மேலும் பெரும்பாலும் குருமார்கள் மற்றும் அரசியல்வாதிகளை விமர்சித்தார்.[14] எதி பாக்கித்தானில் மத சகிப்புத்தன்மையின் வலுவான ஆதரவாளராக இருந்தார். கத்ரீனா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் 1985 எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்கும் ஆதரவாக இருந்தார்.[15][16] அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதி பல முறை பரிந்துரைக்கப்பட்டார். ( மலாலா யூசப்சையி உட்பட)[17] காந்தி அமைதி விருது, அக்மதியா முஸ்லிம் அமைதி பரிசு மற்றும் யுனெஸ்கோ-மதன்ஜீத் சிங் பரிசு உட்பட பல விருதுகளை எதி பெற்றுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை தொகு

எதி, 1920-களின் பிற்பகுதியில் பிரித்தானிய இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் உள்ள பன்த்வாவில் ஒரு மேமன் குடும்பத்தில் பிறந்தார்.[18][19] தனது வாழ்க்கை வரலாற்றில், சாப்பாட்டுக்காக தனது தாயார் தனக்கும், இன்னொருவர் ஏழைக் குழந்தைக்கும் 1 பைசாவை கொடுப்பார் என்று கூறியுள்ளார். தனக்கு பதினொரு வயதாக இருந்தபோது, தனக்கு தாயார் பக்கவாதத்தால் முடங்கி, எதிக்கு 19 வயதாக இருந்தபோது அவர் இறந்தார். இவரது தனிப்பட்ட அனுபவங்களும், நோயின் போது இவரது தாயைக் கவனித்துக்கொண்டது. வயதான, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் சவாலானவர்களுக்கு ஒரு சேவை முறையை உருவாக்க இவரைத் தூண்டியது. இந்தியாவின் பிரிவினை 1947-இல் எதியையும் அவரது குடும்பத்தினரையும் பாக்கித்தானுக்கு குடிபெயர வழிவகுத்தது. பின்னர் அவர் ஒரு மொத்த கடை சந்தையில் வேலை செய்ய கராச்சிக்கு மாறினார். இவர் ஆரம்பத்தில் ஒரு சுற்றி திரிந்து விற்பனை செய்பவராக இருந்தார். பின்னர் கராச்சியில் மொத்த சந்தையில் துணியை விற்கும் தரகு முகவராக ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் தனது சமூகத்தின் உதவியுடன் ஒரு இலவச மருந்தகத்தை நிறுவினார்.

எதி அறக்கட்டளையின் ஆரம்ப நாட்கள் தொகு

அப்துல் சத்தர் எதி, குழந்தையாக இருந்தபோது எதி அறக்கட்டளையினைத் துவங்கும் எண்ணம் பிறந்தது. பதினொரு வயதில், எதியின் தாய் மனநலம் பாதிக்கப்பட்டு பக்கவாதத்தால் முடங்கினார். இளம் அப்துல் சத்தார் எதி தனது தாயின் கவனிப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மேலும் அவருக்கு தினமும் உணவு, குளியல் மற்றும் ஆடை உடுத்துவது போன்ற பணிகளை ஏற்றுக்கொண்டார். அவரது மோசமடைந்துவரும் மன மற்றும் உடல் நிலை எதியின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இவர் உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளியேறி, தனது தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்தினார். எதியின் தாய் இவரது பத்தொன்பததாவது வயதில் இறந்தார். தனது தாயின் மரணம் இதேபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட மற்ற சக பாக்கி்த்தானியர்களை கவனிக்க இவருக்குள் எண்ணம் தோன்றியது. 1947-இல் இவரது குடும்பம் பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்த பிறகு, எதி மற்ற சமூக உறுப்பினர்களின் உதவியுடன் ஒரு இலவச மருந்தகத்தை நிறுவினார். பாக்கித்தானில் சுகாதாரத் துறையை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அவருக்கு "எதி டிரஸ்ட்" என்று அழைக்கப்படும் மக்களுக்கான தனிப்பட்ட நல அறக்கட்டளையை நிறுவ உதவியது. பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியுதவியின் மூலமாக ரூபாய் 2 இலட்சம் எதி தொண்டு நிறுவனத்திற்கு கிடைத்தது.[20] மேலும் இவரின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலமாக ஒரு மகப்பேறு இல்லம் மற்றும் அவசர முதலுதவி வண்டி போன்ற மற்ற மருத்துவ சேவைகளையும் இவரின் தொண்டு நிறுவனம் செய்தது. தனது தொண்டு நிறுவனத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் இவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மக்களுக்கு சேவையாற்றும் உன்னதமான நோக்கத்திற்காக இவரின் தொண்டு நிறுவனம் மக்களிடம் நிதியுதவி திரட்டியது. எதி அறக்கட்டளை உறவுகள் அல்லாத சடலங்களை புதைப்பது அல்லது பேரழிவுகள் போன்ற நிவாரணத்திற்கு உதவுவது போன்ற ஒவ்வொரு மனிதாபிமான காரணங்களுக்கும் இவர்களின் தொண்டு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை ஒதுக்கியது..

இவர் 2009 இல் தேசிய பொது வானொலியில் பேசும்போது "நடைபாதையில் மக்கள் கிடப்பதை நான் கண்டேன்   . . . கராச்சியில் காய்ச்சல் பரவியது, அவர்களுக்கு சிகிச்சையளிக்க யாரும் இல்லை. எனவே நான் பெஞ்சுகளை அமைத்து மருத்துவ மாணவர்களை தன்னார்வத் தொண்டுக்கு அழைத்துச் சென்றேன். நான் பணமில்லாமல் இருந்தேன். தெருவில் நன்கொடைகளை கேட்டுப் பெற்றுக் கொண்டேன். மக்கள் கொடுத்தார்கள். எனது வேலையைத் தொடங்க இந்த 8-க்கு -8 அறையை வாங்கினேன். " என்று கூறினார்.[21]

20 வயதில் எதி ஒரு தன்னார்வலராக மேமன் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார். இருப்பினும், இது மேமன் மக்களுக்கு மட்டுமே சென்றது என்பதை புரிந்துகொண்டவுடன், தனது மேலதிகாரிகளை எதிர்கொண்டு ஒரு சுயேச்சையான மருத்துவ மையத்தை உருவாக்கினார். இவர் எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக மேமன்கள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சினார். எனவே தன்க்கான பாதுகாப்பையும் அறிவையும் தேடி நாட்டை விட்டு வெளியேறினார். எதி ஐரோப்பாவுக்குச் சென்று நன்கொடைகளைக் கேட்டு உரோம் வழியாக இலண்டனுக்குச் சென்றார். இலண்டனில் இவர் இருந்த நேரம், ஐக்கிய இராச்சியத்தில் அமைக்கப்பட்ட சமூக நலத் திட்டங்களை ஆராய்வதற்கு இவரை அனுமதித்தது, மேலும் இவர் தனது மீதமுள்ள தொண்டு பணிகளை அடிப்படையாகக் கொண்டார்.[22] ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க எதி தீர்மானித்தார். அடுத்த அறுபது ஆண்டுகளில் இவர் பாக்கித்தானில் பொதுநல முகத்தை ஒற்றைக் கையால் மாற்றினார்.

"மக்கள் படித்தவர்களாக மாறிவிட்டனர், ஆனால் இன்னும் மனிதர்களாக மாறவில்லை."

அப்துல் சத்தார் எதி[23]

எதி அறக்கட்டளையும் பில்கிஸ் எதி அறக்கட்டளையும் தொகு

ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க எதி தீர்மானித்தார். அடுத்த அறுபது ஆண்டுகளில், இவர் பாக்கித்தானில் பொதுநல முகத்தை தனது ஒற்றைக் கையால் மாற்றினார். எதி "எதி அறக்கட்டளை"யை நிறுவினார். கூடுதலாக, இவர் ஒரு பொதுநல அறக்கட்டளையையும் நிறுவினார். ஆரம்பத்தில் ஐந்தாயிரம் ரூபாயுடன் "எதி டிரஸ்ட்" என்று பெயரிடப்பட்டது. இந்த அறக்கட்டளை பின்னர் "பில்கிஸ் எதி டிரஸ்ட்" என மறு பெயரிடப்பட்டது. [24] [24] ஏழைகளுக்கான பாதுகாவலராகக் கருதப்படும் எதி ஏராளமான நன்கொடைகளைப் பெறத் தொடங்கினார். இது இவரது சேவைகளை விரிவுபடுத்த அனுமதித்தது. இன்றுவரை, எதி அறக்கட்டளை அளவு மற்றும் சேவை இரண்டிலும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தற்போது பாக்கித்தானில் மிகப்பெரிய பொதுநல அமைப்பாக உள்ளது. ஆரம்பத்தில் இருந்தே, எதி அறக்கட்டளை கைவிடப்பட்ட 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு, 50,000-க்கும் மேற்பட்ட அனாதைகளுக்கு மறுவாழ்வு அளித்து, 40,000 -க்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது.[25] இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாக்கித்தானில் 330 க்கும் மேற்பட்டபொதுநல மையங்களை நடத்துகிறது. அவை உணவு சமையலறைகள், புனர்வாழ்வு இல்லங்கள், கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்குமிடங்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகள் ஆகியவை.[26]

எதி அறக்கட்டளை முற்றிலும் தனியார் நன்கொடைகளால் நிதியளிக்கப்படுகிறது. இனம் அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் மக்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது.[27] இது உலகின் மிகப்பெரிய தன்னார்வ முதலுதவி வண்டி சேவையை இயக்குகிறது (1,500 ) மற்றும் 24 மணி நேர அவசர சேவைகளை வழங்குகிறது. இது இலவச நர்சிங் ஹோம்ஸ், அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், பெண்கள் தங்குமிடங்கள் மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான மறுவாழ்வு மையங்களையும் இயக்குகிறது.[28] இது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, காக்கேசியா, கிழக்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் நிவாரண நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. 2005 ஆம் ஆண்டில், கத்ரீனா சூறாவளிக்குப் பின்னர் நிவாரணப் பணிகளுக்கு அறக்கட்டளை 100 000 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்தது.[29]

இவரது மகன் பைசல் எதி, மனைவி பில்கிஸ் எதி மற்றும் மகள்கள் ஆகியோர் இவரது உடல்நலக்குறைவின் போது அமைப்பின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகித்தனர்.[25] 1990 ஆம் ஆண்டில் இந்தியாடுடே இவரை பாக்கித்தானின் அன்னை தெரேசாவின்]] பதிப்பாக ஒரு முறை குறிப்பிட்டது. [30] மேலும் பிபிசி இவர் "பாக்கித்தானின் மிகவும் மரியாதைக்குரிய நபராக கருதப்படுவதாகவும், சிலரால் கிட்டத்தட்ட ஒரு துறவியாகக் காணப்பட்டார்" என்றும் எழுதியது.[12]

2014 ஆம் ஆண்டில், இந்த அறக்கட்டளையில் 400,000 டாலர் ரொக்கமாக கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் வலதுசாரி தாக்குதல்களுக்கும் பாக்கிஸ்தானின் தீவிரவாத வலதுசாரிகளின் போட்டிக்கும் இலக்காக இருந்து வருகிறது.[31]

பயண சிக்கல்கள் தொகு

1980-களின் முற்பகுதியில், லெபனானுக்குள் நுழைந்தபோது எதியை இஸ்ரேலிய துருப்புக்கள் கைது செய்தனர். 2006 ஆம் ஆண்டில், கனடாவின் தொராண்டோவின் ஒன்ராறியோவில் 16 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டார். ஜனவரி 2008 இல், நியூயார்க் நகரில் உள்ள ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை பறிமுதல் செய்த எட்டு மணி நேரத்திற்கும் மேலாக இவரை விசாரித்தனர். அடிக்கடி தடுத்து வைக்கப்பட்டுள்ளதைப் பற்றி கேட்டபோது, "என் தாடி மற்றும் உடை பற்றி மட்டுமே நான் யோசிக்க முடியும்" என்று கூறினார். ஒரு பாரம்பரிய உடை மற்றும் நீண்ட தாடியுடன் இவரது தோற்றம் பயண அதிகாரிகளை இவரை விசாரிக்க வைக்க தூண்டியது.[32]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

1965-ஆம் ஆண்டில் எதி மருந்தகத்தில் பணிபுரிந்த ஒரு செவிலியரான பில்கிஸை எதி மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள், இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். பில்கிஸ் கராச்சியில் உள்ள தலைமையகத்தில் இலவச மகப்பேறு இல்லத்தை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகாதவர்கள் உட்பட கைவிடப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க ஏற்பாடு செய்கிறார். [33] எதி தனது சன்யாச வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர். இரண்டு ஜோடி ஆடைகளை மட்டுமே வைத்திருந்தார், ஒருபோதும் தனது அமைப்பிலிருந்து சம்பளம் வாங்கவில்லை. தனது அமைப்பின் அலுவலகத்திற்கு அடுத்த ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.[12][34][35] எதி தான் "ஒருபோதும் ஒரு மத நபராக இருந்ததில்லை" என்று கூறினார்.

நோய் மற்றும் மரணம் தொகு

25 ஜூன் 2013 அன்று, எதியின் சிறுநீரகங்கள் செயலிழந்தன. சிறுநீரக நன்கொடையாளரைக் கண்டுபிடிக்காவிட்டால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிசில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.[36] வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட பின்னர் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக எதி 2016 ஜூலை 8 அன்று தனது 88 ஆவது வயதில் இறந்தார். அவரது கடைசி விருப்பங்களில் தனது உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அடங்கும். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாததால், அவரது கருவிழிப்படலம் மட்டுமே பொருத்தமாக இருந்தது. அவர் கராச்சியில் உள்ள எதி கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[37]

எதிர்வினைகள் மற்றும் இறுதி சடங்குகள் தொகு

பல உயர் பாக்கித்தான் அதிகாரிகளிடமிருந்து அவரது மரணத்திற்கான எதிர்வினைகள் வந்தன. பிரதமர் நவாஸ் ஷெரீப், "மனிதகுலத்தின் ஒரு சிறந்த ஊழியரை நாங்கள் இழந்துவிட்டோம்" என்றும், சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய, வறிய, உதவியற்ற மற்றும் ஏழைகளானவர்களுக்கு அவர் அன்பின் உண்மையான வெளிப்பாடாக இருந்தார்." என்றும் கூறினார்.[12] இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப், அவரை "உண்மையான மனிதாபிமானம்" என்று அழைத்தார்.

எதி இறந்த மறுநாளே பிரதமர் ஷெரீப் தேசிய துக்கத்தை அறிவித்து அவருக்கு மாநில இறுதி சடங்கை அறிவித்தார். முகம்மது அலி ஜின்னா மற்றும் சியா-உல்-ஹக் ஆகியோருக்குப் பிறகு அரசு மரியாதையுடன் துப்பாக்கி வண்டி இறுதி சடங்கைப் பெற்ற மூன்றாவது பாக்கித்தானியரானார். அந்த நேரத்தில், இறுதி சடங்கைப் பெறுவதற்கு அதிகாரமோ அல்லது பாத்திரமோ இல்லாத ஒரே பாக்கித்தானியராக இருந்தார். இடைசேவைகள் பொது உறவுகளின்படி, எதிக்கு மாநில மரியாதை ஒரு காவலர்கள் மரியாதை மற்றும் 19-துப்பாக்கி குண்டுகள் முழங்க வணக்கம் வழங்கப்பட்டது. அவரது ஜனாசாவில் (இறுதி பிரார்த்தனை) கலந்து கொண்டவர்களில் மம்னூன் மம்நூன் ஹுசைன் (பாக்கித்தான் அதிபர்), ராசா ரப்பானி ( பாக்கித்தான் செனட்டின் தலைவர் ), இஷ்ரதுல் இபாத் ( சிந்து மாகாண ஆளுநர்), கைம் அலி ஷா மற்றும் ஷெபாஸ் ஷெரீப் ( பிரமுகர்கள் ) கராச்சியின் தேசிய அரங்கத்தில் சிந்து மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள்), ரஹீல் ஷெரீப் (ராணுவத் தளபதி) முகமது ஜகாவுல்லா மற்றும் சோஹைல் அமன் ( பாகிஸ்தான் கடற்படை மற்றும் விமானப்படைத் தலைவர்கள் ) ஆகியோர் முக்கியமானவர்கள்.[38][39]

ஆளுமை தொகு

4 ஜூலை 2016 அன்று, பாதுகாப்பு வீட்டுவசதி ஆணையம் கடற்கரை அருகில் 5 கி.மீ நீளமுள்ள கடற்கரை அவென்யூவை 'அப்துல் சத்தார் எதி அவென்யூ' என மறுபெயரிடுவதற்கான முடிவை அறிவித்தது..

2017 பிப்ரவரி 28, அன்று, கூகிள் தேடல் இவரது "சிறந்த-திறமையான" முதலுதவி வண்டி சேவையைப் பாராட்டி கூகிள் டூடுல் மூலம் எதியைக் கொண்டாடியது.[40][41]

2017 மார்ச் 31 அன்று, பாக்கித்தானிய அரசு வங்கி பிரதமர் ஷெரீப்பின் பரிந்துரையின் பேரில் ஒரு. 50 கப்ரோ-நிக்கல் நினைவு நாணயம் வெளியிட்டது. பிதமர் தேசிய அளவில் எதியின் சேவைகளை நினைவுகூர முடிவு செய்தார்.[42] நினைவு நாணயத்துடன் கௌரவிக்கப்பட்ட ஒரே சமூக சேவகர் மற்றும் ஐந்தாவது பாக்கித்தான் ஆளுமை என்ற பெருமையை எதி பெற்றார்.

உலகப் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் சகிதுல் ஆலம் 1995 முதல் எதியை புகைப்படம் எடுத்தார்.[43]

திட்டம் தொகு

2011 ஆம் ஆண்டில் பாக்கித்தான் பிரதமர் யூசஃப் ரசா கிலானி அமைதிக்கான நோபல் பரிசுக்கு எதியை பரிந்துரைத்தார்.[44] மீண்டும் 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், எதிக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்காக 30,000 பேர் கையெழுத்திட்ட மனுவை மலாலா யூசுப்சாயின் தந்தை ஜியாவுதீன் யூசுப்சாய் அனுப்பினார்.[45] இவரது இறப்பு குறித்த மலாலாவின் இரங்கல் செய்தியை, பிபிசி உருது சேவை ஒளிபரப்பியது. அதில் "அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் என்ற முறையில், பரிசுக்கு மக்களை பரிந்துரைக்கும் உரிமையை நான் வைத்திருக்கிறேன். அப்துல் சத்தார் எதியை நான் பரிந்துரைத்தேன்" என்று மேற்கோளிட்டுள்ளார்.[46]

பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் நஜாம் சேத்தி, கடாபி மைதானத்தை எதியின் இறப்பிற்குப் பிறகு பெயர் மாற்ற முன்மொழிந்தார்.[47]

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Ahmed, Munir (8 July 2016). "Pakistan's legendary 'Angel of Mercy' Abdul Edhi dies at age 88". Toronto Star. https://www.thestar.com/news/world/2016/07/08/pakistans-legendary-angel-of-mercy-abdul-edhi-dies-aged-88.html. பார்த்த நாள்: 8 July 2016. 
  2. "The richest poor man – The Express Tribune". tribune.com.pk. 28 April 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2017.
  3. "The Prime Minister Declared A Day Of National Mourning". Geo News. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  4. "Revered humanitarian Abdul Sattar Edhi passes away". ARY News. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  5. "Abdul Sattar Edhi: A life in pictures – The Express Tribune". tribune.com.pk. 9 July 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
  6. "Abdul Sattar Edhi: Greatest Philanthropist In Pakistan's History". foreign policy news.org. 3 November 2017. பார்க்கப்பட்ட நாள் 3 November 2017.
  7. "Abdul Sattar Edhi: Why Google honours him today". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-07-03.
  8. Desk, News (2017-11-05). "Land mafia taking over Edhi properties". Global Village Space (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-03. {{cite web}}: |first= has generic name (help)
  9. "Abdul Sattar Edhi: Why Google honours him today". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  10. Dawn.com, AFP (8 July 2016). "Celebrated humanitarian Abdul Sattar Edhi passes away in Karachi". http://www.dawn.com/news/1267583. பார்த்த நாள்: 9 July 2016. 
  11. Masood, Salman (8 July 2016). "Abdul Sattar Edhi, Pakistan's 'Father Teresa,' Dies at 88". https://www.nytimes.com/2016/07/09/world/middleeast/abdul-sattar-edhi-pakistans-father-teresa-dies-at-88.html?_r=0. பார்த்த நாள்: 9 July 2016. 
  12. 12.0 12.1 12.2 12.3 "Pakistani philanthropist Abdul Sattar Edhi dies aged 88". BBC News. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
  13. The World's Greatest Living Humanitarian May Be From Pakistan, The Huffington Post. Retrieved 24 March 2016
  14. "Dailytimes | Edhi: the ordinary man who was extraordinary — II". dailytimes.com.pk. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  15. (www.dw.com), Deutsche Welle. "Abdul Sattar Edhi – A life bigger than accolades | Asia | DW.COM | 08.07.2016". DW.COM. பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  16. "Edhi Foundation gave $100,000 for Katrina relief efforts: US ambassador". பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  17. Dawn.com (2016-07-09). "No one deserves Nobel Peace Prize more than Abdul Sattar Edhi, says Malala". பார்க்கப்பட்ட நாள் 2016-08-14.
  18. "Name the new airport after Edhi". thenews.com.pk. 18 July 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.
  19. Boone, Jon (13 July 2016). "Abdul Sattar Edhi obituary". theguardian.com. பார்க்கப்பட்ட நாள் 14 July 2016.
  20. "Founder Profile – Edhi Welfare Organization".
  21. Julie McCarthy, Pakistan Philanthropist Cares For Karachi's Forgotten, NPR, 28 July 2009. Retrieved 18 July 2016.
  22. "The day I met Abdul Sattar Edhi, a living saint" (in en-GB). 2008-04-10. பன்னாட்டுத் தர தொடர் எண்:0307-1235. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/8440920/The-day-I-met-Abdul-Sattar-Edhi-a-living-saint.html. 
  23. Masood, Salman (8 July 2016). "Abdus Sattar Edhi, Pakistan's 'Father Teresa,' Dies at 88 - NYTimes.com". nytimes.com. https://www.nytimes.com/2016/07/09/world/middleeast/abdul-sattar-edhi-pakistans-father-teresa-dies-at-88.html?nytmobile=0. பார்த்த நாள்: 9 July 2016. 
  24. 24.0 24.1 Citation Needed.
  25. 25.0 25.1 Web Desk (July 9, 2016). "ABDUL SATTAR EDHI LAID TO REST IN KARACHI". Radio Pakistan. Archived from the original on 10 July 2016. பார்க்கப்பட்ட நாள் July 9, 2016.
  26. Web Desk (July 9, 2016). "Serving from cradle to death". The Nation News Paper. பார்க்கப்பட்ட நாள் July 9, 2016.
  27. "Abdul Sattar Edhi | Pakistani humanitarian" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/biography/Abdul-Sattar-Edhi. 
  28. "Pakistan's saviour of the desperate". http://news.bbc.co.uk/2/hi/south_asia/1221986.stm. 
  29. "Statement of American Ambassador David Hale on the Passing of Abdul Sattar Edhi | U.S. Embassy & Consulates in Pakistan" (in en-US). U.S. Embassy & Consulates in Pakistan. https://pk.usembassy.gov/statement-american-ambassador-david-hale-passing-abdul-sattar-edhi/. 
  30. India Today, Volume 15, Part 2 1990.
  31. Boone, Jon (2015-04-01). "'They call him an infidel': Pakistan's humble founder of a charity empire". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
  32. Khan (29 January 2008). "Pakistan aid worker stuck in US". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7215145.stm. பார்த்த நாள்: 25 March 2016. 
  33. Far Eastern Economic Review 1996.
  34. "Abdul Sattar Edhi: He was a hero to Pakistan's poor and needy". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
  35. "Renowned Pakistani Philanthropist Abdul Sattar Edhi Dies at 88". voanews.com. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
  36. Edhi suffers from kidney failure, to stay on dialysis rest of his life. The Express Tribune. 25 June 2013. Retrieved 24 March 2016.
  37. Times, The Sindh (9 July 2016). "Abdul Sattar Edhi laid to rest at the Edhi Village Karachi – The Sindh Times". thesindhtimes.com. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  38. Parvez Jabri (9 July 2016). "19-Gun Salute presented to Edhi's Coffin". Business Recorder. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
  39. "Army Chief, President, Senate Chairman, others offer Edhi's funeral". Dunya News. 9 July 2016. பார்க்கப்பட்ட நாள் 9 July 2016.
  40. "Abdul Sattar Edhi: Why Google honours him today". அல் ஜசீரா. 28 February 2017. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  41. Gemma Mullin (28 February 2017). "Who was Abdul Sattar Edhi and why is Pakistan's 'Angel of Mercy' being honoured with a Google Doodle?". The Sun. பார்க்கப்பட்ட நாள் 28 February 2017.
  42. Talqeen Zubairi (July 13, 2016). "Special Edhi coin to be issued by State Bank". Dawn News. பார்க்கப்பட்ட நாள் July 13, 2016.
  43. Yasmin Jaffri (August 22, 2018). Humanitarian Ties: Why Shahidul Alam Admired Pak Philanthropist Abdul Sattar Edhi The Wire. Retrieved September 5, 2018.
  44. "PM recommends Abdul Sattar Edhi for Nobel Peace Prize nomination". Express Tribune. November 29, 2011. பார்க்கப்பட்ட நாள் July 18, 2016.
  45. "Campaign for Abdul Sattar Edhi to receive Nobel Peace Prize launched by father of Malala Yousafzai". Birmingham Mail. January 13, 2011. பார்க்கப்பட்ட நாள் July 19, 2016.
  46. "No one deserves Nobel Peace Prize more than Abdul Sattar Edhi, says Malala". Dawn News. July 9, 2016. பார்க்கப்பட்ட நாள் July 19, 2016.
  47. "Najam Sethi for renaming Qaddafi stadium after Edhi". thenews.com.pk. 11 July 2016. பார்க்கப்பட்ட நாள் 22 July 2016.

வெளி இணைப்புகள்s தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_சத்தார்_எதி&oldid=3927127" இலிருந்து மீள்விக்கப்பட்டது