அமானுல்லா கான் யாசின்சாய்

அரசியல்வாதி

அமானுல்லா கான் யாசின்சாய் (Amanullah Khan Yasinzai) ( உருது: امان اللہ خان یاسینزئی </link> ; பிறப்பு 7 ஆகத்து 1954) பலூசிசுதானின் 21வது ஆளுநர் ஆவார். இவர் பலூசிஸ்தான் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

அமானுல்லா கான் யாசின்சாய்
امان اللہ خان یاسینزئی
பலூசிசுதானின் 21வது ஆளுநர்
பதவியில்
4 அக்டோபர் 2018 – 7 சூலை 2021
குடியரசுத் தலைவர்ஆரிஃப் ஆல்வி
பிரதமர்இம்ரான் கான்
முன்னையவர்முகம்மது கான் அச்சக்சாய்
பின்னவர்சையத் சாகூர் அகமது ஆகா
பலூசிசுதான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பதவியில்
14 செப்டம்பர் 2005 – 5 ஆகத்து 2009
பலூசிசுதான் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
பதவியில்
27 சனவரி 1997 – 5 ஆகத்து 2009
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு07 ஆகத்து 1954 (வயது 68)
குவெட்டா, பலூசிசுதான், பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

யாசின்சாய் 1954 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 7 ஆம் நாளன்று குவெட்டாவில் பிறந்தார். லாகூரில் உள்ள பார்மன் கிறிசுடியன் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். [1]

தொழில் தொகு

1997 ஆம் ஆண்டு சனவரி மாதம் 27 ஆம் தேதி முதல் 2009 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதி வரை பலுசிஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். மேலும் தலைமை நீதிபதியாக 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் 2009 ஆம் ஆண்டு பதவி விலகும் வரை பணியாற்றினார். [2] 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பெர்வேசு முசாரப் அவசர நிலையை அறிவித்தபோது தற்காலிக அரசியலமைப்பு ஆணையின் கீழ் பதவியேற்றார். தற்காலிக அரசியலமைப்பு உத்தரவு நீதிபதிகள் வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பாக்கித்தானின் உச்ச நீதி மன்றத்தில் குறிப்புகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக அவர் தனது பதவியை துறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. [3]

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று பாக்கித்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் பாக்கித்தான் குடியரசுத் தலைவர் அரிப் அல்வியால் பலூசிசுதானின் 24வது ஆளுநராக யாசின்சாய் நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதியன்று பதவியேற்றார்.

தனது பதவி விலகல் கடிதத்தை 2021 ஆம் ஆண்டு சூலை மாதம் 7 ஆம் தேதியன்று பாக்கித்தான் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார். அவரது பதவி விலகல் கடிதத்தை அதிபர் ஆரிப் ஆல்வி ஏற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள் தொகு