அமிதா பூசண்

இந்திய அரசியல்வாதி

அமிதா பூசண் (Amita Bhushan)(பிறப்பு: பிப்ரவரி 5, 1970) என்பவர் பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் பேகூசராய்[1] சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] பேகூசராய்யில் பிறந்து வளர்ந்த பூசண் சமூக ஆர்வலர் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பாளராகவும் உள்ளார். இவர் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது தாயார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

அமிதா பூசண்
Amita Bhushan
பீகார் சட்டமன்ற உறுப்பினர் 16ஆவது பீகார் சட்டமன்றம்
பதவியில்
2015–2020
முன்னையவர்சுரேந்திர மேத்தா
பின்னவர்குந்தன் குமார்
தொகுதிபேகூசராய்
தலைவர், பீகார் மகளிர் காங்கிரசு
பதவியில்
2021-முதல்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 பெப்ரவரி 1970 (1970-02-05) (அகவை 54)
பேகூசாரல், பீகார், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்2
வாழிடம்பேகூசாரய்
As of 4 ஏப்ரல், 2009

சர்ச்சை தொகு

தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி, பீகாரைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்களில் ஒரு பகுதியினர், தேர்தலில் மோசமான செயல் பட்டவர்களை வேட்பாளர்களாக நிறுத்தும் கட்சியின் முடிவைக் கேள்வி எழுப்பினர்[3]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அமிதா பூசணின் கணவர் அகில இந்தியப் பணியில் அரசு ஊழியராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Welcome to the Official Website of Begusarai District, Bihar". Begusarai.bih.nic.in. 2010-02-04. Archived from the original on 9 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
  2. "All India Congress Committee". AICC. Archived from the original on 2010-02-12. பார்க்கப்பட்ட நாள் 2010-02-19.
  3. Mishra, Dipak (4 April 2009). "Everything not hunky-dory in Cong". The Times of India. https://timesofindia.indiatimes.com/Patna/Everything-not-hunky-dory-in-Cong/articleshow/4355737.cms. பார்த்த நாள்: 11 November 2019. 

மேலும் பார்க்கவும் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிதா_பூசண்&oldid=3683475" இலிருந்து மீள்விக்கப்பட்டது