அமிலநீக்கி

காடியை நடுநிலையாக்கும் பொருள்

அமிலநீக்கி ( antacid) என்பது வயிற்றின் அமிலத்தன்மையை சமன்செய்யும் ஒரு பொருளாகும். மேலும் இப்பொருள் நெஞ்சு எரிச்சலையும் நீக்கி விடுவிக்கிறது.

அமிலநீக்கி மாத்திரைகள்

மருத்துவப் பயன்கள் தொகு

மருத்துவர்களின் பரிந்துரைக் கடிதம் இல்லாமலேயே கடைகளில் வாங்கிக் கொள்ள முடிகின்ற அமிலநீக்கிகள் வாய்வழியாக உட்கொள்ளப்படுகின்றன. அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிவு , இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் ஆகிய காரணங்களுக்காக இதை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். அறிகுறிசார்ந்த சிகிச்சைகளுக்கு வேண்டுமானால் அமிலநீக்கியைப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைக்கிறார்கள்.[1]

எச்2 ஏற்பி எதிர்ப்பிகள் அல்லது புரோட்டான் குழல் தடுப்பிகள் முதலான அமிலம் குறைக்கும் மருந்துகளில் இருந்து அமிலநீக்கிகள் வேறுபட்டவையாகும். இவை வயிற்றுப் புண்களுக்கு காரணமான எலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியாக்களைக் கொல்வதில்லை.[1]

பக்க விளைவுகள் தொகு

மக்னீசியம் வகை அமிலநீக்கிகளால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம், கால்சியம் அல்லது அலுமினியம் வகை அமிலநீக்கிகள் மலச்சிக்கலையும் , அரிதாக, நீண்ட கால பயன்பாட்டினால் சிறுநீரகத்தில் கற்களையும் ஏற்படுத்தலாம். அலுமினிய வகை அமிலநீக்கிகள் நீண்ட கால பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்தான எலும்புப்புரை நோயை உண்டாக்கிவிடலாம்.[2]

அமிலநீக்கியின் வினைவழிமுறை தொகு

அமிலநீக்கிகளில் கார அயனிகளைக் கொண்டிருப்பதால் அவை வயிற்றிலுள்ள அமிலத்தை நேரடியாக நடுநிலையாக்கம் செய்கின்றன.[3]

நன்றாக அறியப்பட்ட சில அமிலநீக்கி வகைகள் தொகு

கார அயனிகளைக் கொண்ட வேதி உப்புகளே எதிரயனியாகின்ற அமிலநீக்கிகளாகும். பொதுவாக பைகார்பனேட்டுகள் கார அயனிகளாக பயன்படுத்தப்படும் ஆனால் ஐதராக்சைடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

பொருள் கார அயனி அலுமினியம் கால்சியம் மக்னீசியம் பொட்டாசியம் சோடியம்
அல்கா-செல்ட்சர் பைகார்பனேட்டு X X
ஆண்ட்ரூசு அமிலநீக்கி பைகார்பனேட்டு X
பிரையோச்சி பைகார்பனேட்டு X
ஈகுவேட்டு பைகார்பனேட்டு X X X
மாலோக்சு (நீர்மம்) பைகார்பனேட்டு X X
மாலோக்சு (மாத்திரை) பைகார்பனேட்டு X
மக்னீசியாவின் பால் ஐதராக்சைடு X
பெப்டோ-பிசுமோல் தெரியவில்லை
குழந்தை பெப்டோ பிசுமோல் பைகார்பனேட்டு X
ரென்னி (மாத்திரைகள்) பைகார்பனேட்டு X X
ரோலெய்டுசு பைகார்பனேட்டு X X
தம்சு கார்பனேட்டு X
மைலாண்டா ஐதராக்சைடு X X
ஈனோ பைகார்பனேட்டு X
காவிசுகான் பைகார்பனேட்டு X X
கெலுசில் ஐதராக்சைடு X X
விரைவு-ஈசு கார்பனேட்டு X X

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 U.S. Department of Health & Human Services. Agency for Healthcare Research and Quality 23 September 2011 Consumer Summary - Treatment Options for GERD or Acid Reflux Disease: A Review of the Research for Adults பரணிடப்பட்டது 2014-10-11 at the வந்தவழி இயந்திரம்
  2. U.S. Department of Health and Human Services, National Institutes of Health, U.S. National Library of Medicine. Page last updated: 07 November 2014 Medline Plus: Taking Antacids
  3. Zajac, P; Holbrook, A; Super, ME; Vogt, M (March–April 2013). "An overview: Current clinical guidelines for the evaluation, diagnosis, treatment, and management of dyspepsia". Osteopathic Family Physician 5 (2): 79–85. doi:10.1016/j.osfp.2012.10.005. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிலநீக்கி&oldid=3231685" இலிருந்து மீள்விக்கப்பட்டது