அமீதா சைதுசாபர்

அமீதா சைதுசாபர் ( Hamida Saiduzzafar ) (16 ஜூலை 1921 - 1988) ஓர் இந்திய கண் மருத்துவர் ஆவார். கூடுதலாக சைதுசாபர் ஒரு தீவிர பறவைக் கண்காணிப்பாளராகவும் அறியப்பட்டார்.

அமீதா சைதுசாபர்
பிறப்பு16 ஜூலை 1921
நைனித்தால்
இறப்பு1988
மற்ற பெயர்கள்அமீதா சைது-உசு-சாபர்
பணிகண் மருத்துவர்
உறவினர்கள்சோரா சேகல் (உறவினர்)
உசுரா பட் (உறவினர்)
இரசீத் ஜகான் (மைத்துனி)
சேக் அப்துல்லா (மாமனார்)
பேகம் குர்ஷித் மிர்சா (மைத்துனி)

சுயசரிதை தொகு

அமீதா சைதுசாபர் நைனித்தாலில் சாகிப்சாதா சைதுசாபர் கான் மற்றும் சௌகத் ஆரா பேகம் ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.[1] இவரது தந்தை இலக்னோவில் மருத்துவராகவும் மருத்துவப் பள்ளி பேராசிரியராகவும் இருந்தார். இலக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டமும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இங்கிலாந்தில் இருந்தபோது, இவர் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் பயிற்சி பெற்றார். மேலும் இலண்டனில் கண் அழுத்த நோய் ஆராய்ச்சியில் பணியாற்றினார்.[2]

இந்திய எழுத்தாளரும் மற்றும் மருத்துவருமான இரசீத் ஜஹான் சைதுசாபரின் மைத்துனி ஆவார்.[3] கலைஞர்கள் உசுரா பட் மற்றும் சோரா சேகல் ஆகியோரும் இவரது உறவினர்கள்.

தொழில் தொகு

சைதுசாபர் அலிகரில் உள்ள காந்தி கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். 1978 முதல் 1981 வரை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். 1982இல், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தால் அளிக்கப்படும் சிறந்த பெண்களுக்கான விருதினைப் பெற்றார். 1987இல் உலக சுகாதார அமைப்பில் கண்பார்வை குறைபாடு மற்றும் கண் அழுத்த நோய் பிரிவுக்கான துறையில் பணியாற்றினார். கண் மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பிரித்தானிய மருத்துவ இதழான பிரித்தானிய ஜர்னல் ஆப் ஆப்தால்மாலஜி,[4][5] அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட மருத்துவ இதழான இன்டியன் ஜர்னல் ஆப் ஆப்தால்மாலஜி,[6][7] கண் ஆராய்ச்சிக்கான சர்வதேச சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான எக்ஸ்பெரிமென்ட்டல் ஐ ரிசர்ச் ஆகியவற்றில் தொடர்ந்து தனது ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.[8][9]

சைதுசாபர் பிரித்தானிய மருத்துவ சங்கம், ஐக்கிய இராச்சியத்தின் கண் மருத்துவ சங்கம், அகில இந்திய கண் மருத்துவ சங்கம், பார்வைக் குறைபாடு தடுப்புக்கான தேசிய சங்கம் போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். இவர் அரச கழகத்தின் மருத்துவச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் தனது சுயசரிதையை எழுதினார். 1996 இல் மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.[1][2]

சைதுசாபர் ஒரு தீவிர பறவைக் கண்காணிப்பாளராக அறியப்பட்டார். பறவைகள் பற்றி விரிவுரை செய்தார். மேலும் பறவைக் கண்காணிப்பாளர்களின் செய்திமடலுக்கும், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கத்தின் இதழிலும் கட்டுரைகளை எழுதி பங்களித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அமீதா சைதுசாபர் 1988 இல், பக்கவாதத்தால், தனது அறுபதுகளின் நடுப்பகுதியில் இறந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Urfi, Jamil (2020-05-01). "Remembering Dr. Hamida Saiduzzafar: A birdwatcher par excellence" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-10-18.
  2. 2.0 2.1 2.2 Chattopadhyay, Anjana (2018). Women Scientists in India: Lives, Struggles & Achievements (PDF) (in ஆங்கிலம்).
  3. Saiduzzafar, Hamida (1987). "JSAL interviews DR. HAMIDA SAIDUZZAFAR: A conversation with Rashid Jahan's sister-in-law, Aligarh, 1973". Journal of South Asian Literature 22 (1): 158–165. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-5637. https://www.jstor.org/stable/40873940. 
  4. Saiduzzafar, Hamida (1959-11-01). "Variant of Duane's Retraction Syndrome" (in en). British Journal of Ophthalmology 43 (11): 700–702. doi:10.1136/bjo.43.11.700. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1161. பப்மெட்:14440804. 
  5. Saiduzzafar, Hamida (1962-12-01). "Studies in Ocular Rigidity" (in en). British Journal of Ophthalmology 46 (12): 717–729. doi:10.1136/bjo.46.12.717. பன்னாட்டுத் தர தொடர் எண்:0007-1161. பப்மெட்:18170842. 
  6. Saiduzzafar Hamida (1959-01-01). "The effect of citral on variations in the aqueous outflow facility of rabbits". Indian Journal of Ophthalmology 7 (2): 39–42. https://www.ingentaconnect.com/content/doaj/03014738/1959/00000007/00000002/art00001. 
  7. Saiduzzafar Hamida; Pradhan J; Gogi R (1969-01-01). "Peripheral iridectomy with scleral cautery - a simple technique". Indian Journal of Ophthalmology 17 (1): 11–13. பப்மெட்:5371044. https://www.ingentaconnect.com/content/doaj/03014738/1969/00000017/00000001/art00003. 
  8. Perkins, E. S.; Saiduzzafar, Hamida (1969-10-01). "The effect of plasmin on the facility of outflow in cynomolgus monkeys" (in en). Experimental Eye Research 8 (4): 386–396. doi:10.1016/S0014-4835(69)80003-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-4835. பப்மெட்:4243139. http://www.sciencedirect.com/science/article/pii/S0014483569800035. 
  9. Saiduzzafar, Hamida (1970-10-01). "Tissue fibrinolytic activity in the anterior segment of the eye, as related to aqueous outflow" (in en). Experimental Eye Research 10 (2): 297–301. doi:10.1016/S0014-4835(70)80041-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0014-4835. பப்மெட்:4249557. http://www.sciencedirect.com/science/article/pii/S0014483570800410. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீதா_சைதுசாபர்&oldid=3924506" இலிருந்து மீள்விக்கப்பட்டது