அமோரி லோவின்சு

அமோரி லோவின்ஸ் (Amory Bloch Lovins, பிறப்பு: நவம்பர் 13, 1947) அமெரிக்காவைச் சார்ந்த இயற்பியலாளர் ஆவார். இவர் அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் பிறந்தவர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் அறிஞர், எழுத்தாளர், ராக்கி மவுண்டன் இன்ஸ்ட்டிட்டியூட்(Rocky Mountain Institute) தலைவர் மற்றும் தலைமை விஞ்ஞானியாகவும் அறியப்படுகிறார். இவர் 40 வருடங்களாக சக்தி கொள்கை(energy policy) வகுப்பாளராக ஆய்வுகள் செய்து வருகிறார். உலகின் செல்வாக்கான மனிதர்களுள் இவரும் ஒருவர் என டைம் பத்திரிகை இவரது பெயரை 2009 ஆம் ஆண்டு குறிப்பிட்டிருந்தது. இவர் பல்வேறு கெளரவ முனைவர் (honorary doctorates) பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். 19 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். 8 நாடுகளுக்கு 'சக்தி கொள்கை(energy policy) தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அமோரி லோவின்ஸ்
அமோரி லோவின்ஸ்
பிறப்புநவம்பர் 13, 1947 (1947-11-13) (அகவை 76)
வாசிங்டன்
பணிஇயற்பியலாளர்.[1][2]
மற்றும் சுற்றுச்சூழலியலாளர்

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Right Livelihood Award. Amory and Hunter Lovins (USA) (1983)
  2. அமோரி லோவின்ஸ் Energy Strategy: The Road Not Taken? Foreign Affairs, October 1976.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமோரி_லோவின்சு&oldid=3362970" இலிருந்து மீள்விக்கப்பட்டது