அம்பராம்பாளையம் பெருங்கற்காலக் களம்

அம்பராம்பாளையம் பெருங்கற்காலக் களம், தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அம்பராம்பாளையம் என்னும் ஊரில் உள்ளது. இங்கேயுள்ள பெருங்கற்காலக் கட்டுமானத்தின் தரைப் பகுதியில் கற்பலகை பதிக்கப்பட்டுள்ளது. இது நில மட்டத்தில் இருந்து 60 சதம மீட்டர் தாழ்வாக உள்ளது. அதன் மேல் செவ்வக வடிவின் நான்கு கற்பலகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கிழக்கு-மேற்குத் திசை நோக்கி அமைக்கப்பட்டுள்ள இக்கட்டுமானத்தில் இரண்டு இடு துளைகளும் காணப்படுகின்றன.[1]

மேற்கோள்கள் தொகு

  1. பவுன்துரை, இராசு., தமிழக பெருங்கற்காலக் கட்டிடக்கலை மரபு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2013. பக். 143-145