அம்மான் பச்சரிசி

அம்மான் பச்சரிசி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. hirta
இருசொற் பெயரீடு
Euphorbia hirta
L.
வேறு பெயர்கள்

Chamaescye hirta (L.) Charles Frederick Millspaugh

அம்மான் பச்சரிசி (Euphorbia hirta) ஒரு மருத்துவ மூலிகையாகும். இதற்கு சித்திரவல்லாதி, சித்திரப்பாலாவி, சித்திரப்பாலாடை ஆகிய பெயர்களும் இதற்கு உண்டு. இது முகப்பரு, முகத்தில் எண்ணெய்ப் பசை, கால் ஆணி, பித்த வெடிப்பு, இரைப்பு ஆகியவற்றை குறைக்கவும், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கவும் பயன்படுகிறது.

பெயர் காரணம் தொகு

அம்மான் பச்சரிசியின் விதைகள் தோற்றத்திலும் சுவையிலும் சிறுசிறு அரிசிக் குருணைகள் போலிருப்பதால் ‘பச்சரிசி’ என்றும், தாய்ப்பால் பெருக்கும் உணவு என்பதால் அடைமொழியும் சேர்ந்து ‘அம்மான் பச்சரிசி’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

விளக்கம் தொகு

இந்தத் தாவரத்தின் இலைகள் கூர்மையான அமைப்புடையவை. மெல்லிய தண்டை உடைய சிறிய செடியாக வளரும் இதன் தண்டை உடைத்தால், பால் வடியும். தரையோடு படர்வதும், சிறு செடியாக வளர்வதும், நிறங்களின் அடிப்படையிலும் அம்மான் பச்சரிசியில் பிரிவுகள் உண்டு.[1]

மேற்கோள்கள் தொகு

  1. டாக்டர் வி. விக்ரம்குமார் (2 சூன் 2018). "இது பால் மருந்து". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 4 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மான்_பச்சரிசி&oldid=3853994" இலிருந்து மீள்விக்கப்பட்டது