அயனமண்டல நோய்

அயனமண்டல நோய் (tropical disease) எனப்படுவது வெப்பமண்டலத்தில் அல்லது அயனவயல் மண்டலத்தில் உள்ள பகுதிகளில் உண்டாகும் நோய்கள் ஆகும். இவை மிதக் காலநிலை மண்டலத்தில் (temperate zone) குறைவான வீதத்தில் காணப்படுகின்றன, பூச்சிகள் வலுக்கட்டாய உறங்குநிலைக்குத் தள்ளப்படுவது இதற்குக் காரணமாகும். பெரும்பான்மையான அயனமண்டல தொற்றுநோய்கள் கொசுக்கள், ஈக்கள் ஆகிய நோய்க்காவிகளால் பரவுகின்றன, ஏனையவை வளி, நீர் மூலம் பரவுகின்றன. நோயைக் காவும் பூச்சிகள் பாக்டீரியா, ஒட்டுண்ணிகள், தீநுண்மங்கள் போன்ற நோய் உண்டாக்கும் உயிரினங்களைக் காவிச் செல்கின்றன. ஒட்டுண்ணிகள் போன்றனவற்றின் வாழ்க்கை வட்டத்தின் ஒருபகுதி இவ்வாறான நோய்க்காவிகளுள் நடக்கின்றது. பெரும்பாலும் நோய்க்காவிகள் ஒருவரைக் "கடிப்பதன்" மூலம் தமது உமிழ்நீரையோ அல்லது சுரப்புகளையோ அவருக்குள் செலுத்தி குருதியைப் பெற்றுக்கொள்கின்றன, உமிழ்நீரில் காணப்படும் நுண்ணுயிரிகளால் நோய்த் தொற்று ஏற்படுகின்றது.

சில அயனமண்டல நோய்கள் தொகு

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனமண்டல_நோய்&oldid=3665713" இலிருந்து மீள்விக்கப்பட்டது