அயோத்தி மாநகராட்சி

அயோத்தி மாநகராட்சி (Ayodhya Municipal Corporation), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 16 மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி அயோத்தி மாவட்டத்தின் அயோத்தியை தலைமையிடமாகக் கொண்டு, மே, 2017ம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டதாகும்.

அயோத்தி மாநகராட்சி

श्री अयोध्या जी नगर निगम
வகை
வகை
தலைமை
மேயர்
ரிஷிகேஷ் உபாத்தியா (பாரதிய ஜனதா கட்சி)
உறுப்பினர்கள்60
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
நவம்பர், 2017
வலைத்தளம்
http://www.nagarnigamayodhya.in/en

அயோத்தி நகராட்சி மற்றும் பைசாபாத் நகராட்சிகளை இணைத்து, அயோத்தி மாநகராட்சி, மே 2017 அன்று உத்தரப் பிரதேச அரசு நிறுவியது. 2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, 2,21,118 மக்கள்தொகை கொண்ட அயோத்தி மாநகராட்சி, 60 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1]

மேலும் மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சியும் புதிதாக நிறுவப்பட்டுள்ளது. இப்புதிய இரண்டு மாநகராட்சிகளுடன், உத்தரப் பிரதேசம் 16 மாநகராட்சிகளைக் கொண்டுள்ளது. [2]

மாநகராட்சி தேர்தல், 2017 தொகு

உத்தரப் பிரதேச உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017, நவம்பர் மாதத்தில், 22, 26 மற்றும் 29 நாட்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வமயம் மே, 2017ல் புதிதாக நிறுவப்பட்ட அயோத்தி மாநகராட்சி மற்றும் மதுரா-பிருந்தாவனம் மாநகராட்சிகள், முதல் முறையாக தனது மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளது. [3] [4]

அயோத்தி மாநகராட்சி மேயராக பாரதிய ஜனதா கட்சியின் மேயர் வேட்பாளர் ரிஷிகேஷ் உபாத்தியா வெற்றி பெற்றார். [5]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயோத்தி_மாநகராட்சி&oldid=3749806" இலிருந்து மீள்விக்கப்பட்டது