அரங்கம்பாளையம்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

அரங்கம்பாளையம் (ஆங்கில மொழி: Rangampalayam) அல்லது பேச்சு வழக்கில் 'ரங்கம்பாளையம்' என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

அரங்கம்பாளையம்
Rangampalayam

அரங்கம்பாளையம்
புறநகர்ப் பகுதி
அரங்கம்பாளையம் Rangampalayam is located in தமிழ் நாடு
அரங்கம்பாளையம் Rangampalayam
அரங்கம்பாளையம்
Rangampalayam
அரங்கம்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°18′38″N 77°42′23″E / 11.310500°N 77.706500°E / 11.310500; 77.706500
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்211 m (692 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638009[1]
தொலைபேசி குறியீடு+91424xxxxxxx
வாகனப் பதிவுTN-56 yy xxxx
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, காசிபாளையம், சோலார், மூலப்பட்டறை, பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், வீரப்பம்பாளையம் நஞ்சனாபுரம் மற்றும் திண்டல்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்கிருஷ்ணன் உண்ணி
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கடல் மட்டத்திலிருந்து சுமார் 211 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அரங்கம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°18′38″N 77°42′23″E / 11.310500°N 77.706500°E / 11.310500; 77.706500 ஆகும். ஈரோடு, காசிபாளையம், சோலார், மூலப்பட்டறை, பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம், வீரப்பம்பாளையம், நஞ்சனாபுரம் மற்றும் திண்டல் ஆகியவை அரங்கம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

அரங்கம்பாளையத்தில், கொங்கு கல்வி நிலையம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.[4][5] மேலும்,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரங்கம்பாளையத்தில் அமையப் பெற்றுள்ளது.[6]

ஈரோடு வெளிவட்டச் சாலையின் நீட்டிப்பு, அரங்கம்பாளையம் வழியாகச் செல்கிறது.[7] அரங்கம்பாளையத்தில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாகத்தில், ஈரோடு மாவட்டப் பதிவுத்துறை அலுவலகங்கள் அமைந்துள்ளன.[8]

மேற்கோள்கள் தொகு

  1. "RANGAMPALAYAM Pin Code - 638009, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  2. Gupta, Ed K. R. (2001). Directory of Libraries in India (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7156-985-4.
  3. Madras (India : State) State Electricity Board (1970). Administration Report (in ஆங்கிலம்).
  4. "கொங்கு கல்வி நிலைய ஆண்டு விழா - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-17. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  5. "Kongu National School selected for state hockey tourney". Afternoonnews (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  6. AJKM Solutions. "Contact Erode Arts and Science College, Erode Tamilnadu". Erode Arts and Science College (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  7. Saravanan, S. P. (2020-09-26). "Third phase of outer ring road project begins in Erode". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.
  8. "Six new buildings commissioned to house registration offices". The Hindu (in Indian English). 2015-07-27. பார்க்கப்பட்ட நாள் 2023-02-13.

வெளி இணைப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கம்பாளையம்&oldid=3802635" இலிருந்து மீள்விக்கப்பட்டது