அரசினர் கலைக் கல்லூரி, மேலூர்

அரசு கலைக்கல்லூரி, மேலூர் (Government Arts College, Melur) என்பது இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் மேலூரில் செயல்பட்டுவரும் அரசினர் கலைக்கல்லூரியாகும். 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[1] இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் கற்றுத் தரப்படும் இக்கல்லூரியில் ஏறத்தாழ 2500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர்.

அரசு கலைக்கல்லூரி, மேலூர்
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1969
முதல்வர்டி. ஞானசீலன்
மாணவர்கள்2500
அமைவிடம், ,
இணையதளம்www.melurgac.com

வழங்கும் படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் தற்போது 11 இளநிலைப் பட்டப் படிப்புகளும், 10 முதுநிலைப் பட்டப் படிப்புகளும், 3 ஆராய்ச்சி படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள் தொகு

  • வரலாறு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

முதுநிலைப் படிப்புகள் தொகு

  • வரலாறு
  • தமிழ்
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • வணிகவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • கணினி அறிவியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு