அரசியல் தத்துவம்

அரசியல் தத்துவம் (political philosophy) என்பது நாடு, அரசு, சமூகம், குடிமக்கள், ஆட்சிமுறை, சட்டம் போன்ற அமைப்புகள் மற்றும் அவை சார்ந்த வழக்குப் பொருள்கள் (issues) குறித்த கருத்தியல் சுருக்கங்களில் (conceptual abstractions) ஈடுபடும் தத்துவப் பிரிவு ஆகும்.

தமிழில் அரசியல் தத்துவம் தொகு

தமிழில் அரசியல் தொடர்பாக திருக்குறளில் பல தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. அறம், பொருள், இன்பம் என அறியப்படும் முப்பாலிலே பொருட்பாலில் அரசியல் பற்றி இறை மாட்சி தொடங்கி இடுக்கண் அழியாமை வரையிலான இருபத்தைந்து தலைப்புகளில் இரு நூற்றைம்பது குறள் கவிதைகள் பல நுட்பமான செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. அவை மட்டுமன்றி பொருட்பாலிலே அமைந்துள்ள அமைச்சியல்,அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என ஆறு இயல்களில் இயற்றப்பட்டுள்ள நாற்பத்தைந்து தலைப்புகளில் நானூற்று ஐம்பது குறள் கவிதைகள் கூறுவதும் அரசியல் தத்துவம்தான். தொல்காப்பியக்காலம் தொடங்கி திருக்குறள் காலம் தாண்டி ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் தமிழில் அரசியல் தத்துவம் எதுவும் படைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2010 சூன் மாதம் தமிழ்மண் இதழில் தொல்.திருமாவளவன் அமைப்பாய்த் திரள்வோம் என்கிற அரசியல் தத்துவத் தொடரை எழுதத்தொடங்கி இந்த சனவரி 2014 வரை நாற்பது தலைப்புகளில் முதல் பாகத்தை முடித்திருக்கின்றார். பல அரசியல் தத்துவ நூல்கள் தமிழில் அறிமுகப் படுத்தப் பட்டிருந்த போதும், தமிழில் நவீன காலத்தில் எழுதத்தொடங்கப் பட்டிருக்கின்ற முதல் தமிழ் மூல நூலாகும்.

மேற்கத்திய அரசியல் தத்துவம் தொகு

சாக்ரடிசுக்கு முற்காலத்தைய தத்துவம் தொகு

இது கிரேக்க தத்துவஞானி சாக்ரடிசுடைய காலத்திற்கு முற்பட்ட காலகட்ட தத்துவஞானிகளின் தத்துவத்தொகுப்பு. (இங்கு சாக்ரடிசுடைய தத்துவத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படாத அவர் கால தத்துவஞானிகளும் அடக்கம்.)

மரபார்ந்த மேற்கத்திய அரசியல் தத்துவம் அல்லது கிரேக்க மற்றும் உரோமானிய அரசியல் தத்துவம் தொகு

நவீன மேற்கத்திய அரசியல் தத்துவம் தொகு

சீன அரசியல் தத்துவம் தொகு

ஜப்பானிய அரசியல் தத்துவம் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசியல்_தத்துவம்&oldid=2761481" இலிருந்து மீள்விக்கப்பட்டது