அரசு பெண்கள் பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரி, எக்பல்பூர்

அரசு பெண்கள் பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரி, எக்பல்பூர் என்பது மேற்கு வங்காளத்திலுள்ள கொல்கத்தாவின் எக்பல்பூரில் 2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பெண்களுக்கான அரசு பொது பட்டப்படிப்பு கல்லூரியாகும், கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை பயிற்றுவிக்கும் இந்தக் கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அரசு பெண்கள் பொதுப் பட்டப்படிப்புக் கல்லூரி, எக்பல்பூர்
வகைஇளங்கலைக்கான மகளிர் கல்லூரி
உருவாக்கம்2016; 8 ஆண்டுகளுக்கு முன்னர் (2016)
சார்புகொல்கத்தா பல்கலைக்கழகம்
தலைவர்ஜனாப் ஃபிர்ஹாத் ஹக்கீம்
அமைவிடம்
7, மயூர்பஞ்ச் சாலை,
,
எக்பல்பூர்
, ,
700023
,
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்கல்லூரி இணையதளம்


இக்கல்லூரி 28 ஜனவரி 2016 அன்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவு பெண்களிடையேயும் கல்வியின் தரத்தை பரப்பவும், மேம்படுத்தவும் அதன்வழி சமுதாயநலனை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு இக்கல்லூரி இயங்கி வருகிறது.[1]

கட்டமைப்பு தொகு

பதினான்கு துறைகள் கொண்ட இக்கல்லூரிக்கு சொந்தமாக இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்று, மூன்று மாடிக்கட்டிடம் ஒன்றுமாக விசாலமான கட்டமைப்பையும், மைய நூலகம், ஆய்வகங்கள், கணினி ஆய்வகம் போன்ற வசதிகளையும் கொன்டுள்ளது. இக்கல்லூரி தன் விளையாட்டு மைதானத்தை ஞான சந்திர கோஷ் பாலிடெக்னிக் கல்லூரியுடன் பங்கிட்டுள்ளது. இரு கல்லூரிக்கும் பொதுவான விளையாட்டு மைதானமாக அமைக்கப்பட்டுள்ளது. [2]

துறைகள் தொகு

கலைப்பிரிவு தொகு

  • பெங்காலி
  • ஆங்கிலம்
  • அரபு மொழி
  • பாரசீக மொழி
  • உருது
  • வரலாறு.
  • அரசியல் அறிவியல்
  • சமூகவியல்

அறிவியல் பிரிவு தொகு

  • கணிதம்
  • புவியியல்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • பொருளாதாரம்

வணிகப்பிரிவு தொகு

  • வர்த்தகம்

மேற்கோள்கள் தொகு

  1. "கல்லூரி முதல்வரின் குறிப்புகள்".
  2. "கல்லூரி விவரக்குறிப்பு 2022-2023" (PDF). பார்க்கப்பட்ட நாள் 6 February 2024.