அருணகிரிநாதர் (ஆதீனம்)

ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்ற அருணகிரிநாதர் (ஆங்கில மொழி: Arunagirinathar) (- மறைவு: 2021 ஆகஸ்ட் 13) மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமாவார். தமிழ்த் தொண்டு, ஆன்மீகத் தொண்டு, சமூகத் தொண்டுகளிலும் ஈடுபட்டவர்.

அருணகிரிநாதர்
பிறப்புசீர்காழி, தமிழ்நாடு
இறப்பு (அகவை 77)
மதுரை, தமிழ்நாடு
இயற்பெயர்அருணகிரிநாதர்
தேசியம்இந்தியர்
பெற்றோர்இராம குருசாமி

இளமைக் காலம் தொகு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து[1] பள்ளிப் படிப்பை முடித்தார். இவர் 1980 களில் முரசொலி இதழின் பத்திரிக்கையாளராக இருந்தார்.[2]

ஆன்மீகப் பணிகள் தொகு

இவரது தந்தை அறிவுறுத்தலில் திருவாவடுதுறை ஆதின மடத்தில் சேர்ந்து சைவ சமயக் கல்வியைக் கற்றார்.[3] பின்னர் தருமை ஆதீனத்தில் தம்பிரானாக இருந்து 1975 மே 27ம் தேதி மதுரை ஆதீன இளைய குருமகா சன்னிதானமாகப் பெறுப்பேற்றார்.[4] 1980 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி 292 ஆவது குரு மகா சன்னிதானமாகப் பட்டம் பெற்றார்.[5] மொரிசியஸ், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்குச் சென்று சைவ நெறியைப் பரப்பினார். பல கோயில்களில் தமிழில் குடமுழுக்க நிகழ்ச்சிகளை நடத்தினார்.[3] மாற்று மத நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு சமய நல்லிணக்கம் பேணினார்.

அரசியல் செயல்பாடுகள் தொகு

இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கை அரசுக்கு எதிராகவும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் பல்வேறு பரப்புரைகள் செய்தார்.[3] 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.[6][7] 2019 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.[8]

2012 ஏப்ரல் 12 இல் அடுத்த பீடாதிபதியாக நித்யானந்தாவை இவர் தேர்ந்தெடுத்த நிகழ்வு சர்ச்சையானது.[9] அதன் தொடர்ச்சியாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.[10] உடல்நலக்குறைவால் 2021 ஆகஸ்ட் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு மறைந்தார்.[11]


இவருக்குப் பின்மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் 23 ஆகஸ்டு 2021 அன்று முடிசூட்டப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "மதுரை ஆதீனம் முக்தி அடைந்தார்: தலைவர்கள் இரங்கல்". தினமலர். https://m.dinamalar.com/temple_detail.php?id=116055. பார்த்த நாள்: 14 ஆகத்து 2021. 
  2. "Madurai Adheenam pontiff passes away". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/madurai-adheenam-pontiff-passes-away/article35906125.ece. பார்த்த நாள்: 14 August 2021. 
  3. 3.0 3.1 3.2 "மதுரை ஆதீனம்: செய்தியாளர் முதல் மடாதிபதி வரை - ஆன்மிகத்தில் புரட்சி செய்த அருணகிரிநாதர்!". விகடன். https://www.vikatan.com/spiritual/news/press-reporter-to-spiritual-leader-the-life-journey-of-madurai-adheenam-sri-arunagirinathar. பார்த்த நாள்: 14 August 2021. 
  4. "ஆன்மிகப் பணி; சைவ நெறி; மதுரை ஆதீனத்தின் 292-வது மடாதிபதி - அருணகிரிநாதர் காலமானார்!". விகடன். https://www.vikatan.com/news/general-news/the-292-th-madurai-athenam-arunagirinathar-has-passed-away. பார்த்த நாள்: 13 ஆகத்து 2021. 
  5. "மதுரை ஆதீனம் முக்தி அடைந்தார்: தலைவர்கள் இரங்கல்". தினமலர். https://temple.dinamalar.com/news_detail.php?id=116055. பார்த்த நாள்: 14 August 2021. 
  6. "லோக்சபா தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக 40 தொகுதிகளில் மதுரை ஆதீனம் பிரச்சாரம்". ஒன் இந்தியா. https://tamil.oneindia.com/news/tamilnadu/madurai-adheenam-meets-jaya-vows-support-195124-lse.html. பார்த்த நாள்: 14 August 2021. 
  7. "அதிமுக-வுக்கு ஆதரவாக பிரசாரம்: மதுரை ஆதீனம்". சமயம். https://tamil.samayam.com/madurai-aadhenam-to-campaign-for-admk/articleshow/51958290.cms. பார்த்த நாள்: 14 August 2021. 
  8. "மோடி மீண்டும் பிரதமராக வர தினமும் பிரார்த்தனை செய்கிறேன் - மதுரை ஆதீனம் பேட்டி". என்டிடிவி. https://www.ndtv.com/tamil/loksabha-elections-2019-madurai-aadheenam-arunagirinadhar-pray-daily-for-modi-come-again-as-pm-of-in-2020967. பார்த்த நாள்: 14 August 2021. 
  9. "மதுரை ஆதீனத்தை அரசு ஏற்கமுடியுமா ?". பிபிசி. https://www.bbc.com/tamil/india/2012/05/120502_maduraiaheenam. பார்த்த நாள்: 14 August 2021. 
  10. "உடல்நலக்குறைவால் மதுரை ஆதீனம் காலமானார்". தினமலர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2822706. பார்த்த நாள்: 14 August 2021. 
  11. "மதுரை ஆதீனம் உடலுக்கு அமைச்சா்கள் அஞ்சலி". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2021/aug/14/ministries-pay-homage-to-madurai-athenams-body-3679955.html. பார்த்த நாள்: 14 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணகிரிநாதர்_(ஆதீனம்)&oldid=3289079" இலிருந்து மீள்விக்கப்பட்டது