அருபாக்கு எழிற்புள்

அருபாக்கு எழிற்புள் (Astrapia nigra) என்பது கிட்டத்தட்ட 76 செமீ நீளமான, பெரிய, கருமையான சந்திரவாசிப் பறவையினம் ஒன்றாகும். இது ஒளிர் ஊதா, பச்சை மற்றும் வெண்கல நிற இறகமைப்பைக் கொண்டிருக்கும். இதன் ஆண் பறவை நன்கு நீண்டு அகன்ற வாலையும் மிருதுவான பட்டுப் போன்ற கரிய மார்பு இறகுகளையும் மிகச் சிக்கலான தலையிறகமைப்பையும் கொண்டிருக்கும். பெண் பறவை தன் வயிற்றுப் பகுதியில் வெளிறிய கோடுகளுடன் கூடிய கருங்கபில நிறத்தைக் கொண்டிருக்கும்.

அருபாக்கு எழிற்புள்ளானது இந்தோனேசியாவின் மேலைப் பப்புவா மாநிலத்தின் அருஃபாக்கு மலைகளில் மாத்திரமே காணப்படக்கூடிய, இந்தோனேசியாவுக்குத் தனிச்சிறப்பான பறவையினம் ஆகும். இப்பறவை முதன்மையாகச் சிற்றாழைப் பழங்களை உணவாகக் கொள்ளும்.

அருபாக்கு எழிற்புள் தன் இயலிடத்திற் கருஞ்சொண்டுக் கூரலகியுடன் கலவியில் ஈடுபட்டு வேறு சந்ததியைத் தோற்றுவிக்கும். அது ஒரு காலத்தில் பெருங்கூரலகி (Epimachus ellioti) என அறியப்பட்டது. இன்னமும் சில பறவையியலாளர்கள் அதனைத் தனியான இனமாகக் கருதி, அது அருகிவிட்ட இனமாக அல்லது அற்றுப்போன இனமாகக் கருதிய போதிலும், பலரும் அதனை இவ்விரு இனங்களினதும் கலப்பினச் சந்ததியே எனக் கூறுகின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. [[பன்னாட்டு பறவை வாழ்க்கை]] (2012). "Astrapia nigra". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளித் தொடுப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருபாக்கு_எழிற்புள்&oldid=3477073" இலிருந்து மீள்விக்கப்பட்டது