அர்ச்சனா சுசீந்திரன்

இந்தியத் தடகள வீரர்

அர்ச்சனா சுசீந்திரன் (Archana Suseendran) இந்தியாவைச் சேர்ந்த ஓர் ஓட்டப்பந்தய வீரராவார். 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 9 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். விரைவோட்ட விளையாட்டுப் போட்டியில் இவர் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார்.[1] பெண்கள் 200 மீட்டரில் போட்டியிட்டு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக தடகள வெற்றியாளர் போட்டியில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [2]ஆனால் அரையிறுதியில் போட்டியிட இவர் தகுதிபெறவில்லை.[3]

அர்ச்சனா சுசீந்திரன்
Archana Suseendran
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியர்
பிறப்பு9 சூன் 1994 (1994-06-09) (அகவை 29)
தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)விரைவோட்டம்

36-ஆவது தேசிய விளையாட்டு போட்டி குசராத்து மாநிலத்தில் உள்ள அகமதபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, இராச்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்.[4]

தனியர் சிறப்புகள் தொகு

போட்டி நேரம் (வினாடிகள்) இடம் நாள்
100 மீட்டர் 11.49 இலக்னோ, இந்தியா 29 ஆகத்து 2019
200 மீட்டர் 23.18 பட்டியாலா, இந்தியா 16 ஆகத்து 2019
400 மீட்டர் 56.90 கோயம்புத்தூர், இந்தியா 13 சனவரி 2017
4 × 100 மீட்டர் 43.37 பட்டியாலா, இந்தியா 21 சூன் 2021


மேற்கோள்கள் தொகு

  1. "Archana Suseendran Athlete Profile". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
  2. "Women's 200 metres". iaaf.org. பார்க்கப்பட்ட நாள் 6 October 2019.
  3. "Women's 200 metres – Heats" (PDF). 2019 World Athletics Championships. Archived (PDF) from the original on 30 September 2019. பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
  4. "தேசிய விளையாட்டுப் போட்டி - 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/Sports/OtherSports/national-games-tamil-nadus-archana-suseendran-wins-gold-in-200m-race-807504?infinitescroll=1. பார்த்த நாள்: 28 December 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ச்சனா_சுசீந்திரன்&oldid=3854940" இலிருந்து மீள்விக்கப்பட்டது