அர்த்தநாரி (1946 திரைப்படம்)

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அர்த்தனாரி (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அர்த்தனாரி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கி தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

அர்த்தனாரி
இயக்கம்டி. ஆர். ரகுநாத்[1]
தயாரிப்புடி. ஆர். ரகுநாத்
கலைவாணி பிலிம்ஸ்[1]
கதைபி. எஸ். இராமையா[1]
இசைமெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் மியூசிக் பார்ட்டி[2]
நடிப்புபி. யு. சின்னப்பா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராமச்சந்திரன்
காளி என். ரத்னம்
பி. கண்ணாம்பா
டி. ஏ. மதுரம்
எம். வி. ராஜம்மா
வெளியீடுபெப்ரவரி 7, 1946
ஓட்டம்.
நீளம்10988 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை தொகு

காந்தாரம் என்னும் சாம்ராச்சியத்தின் இளவரசிகளான பகவதி (சரோஜா) மற்றும் புண்யாவதி (ராஜம்மா) ஆகியோர் அவர்கள் துரதிர்ஷ்டத்தால் இராச்சியம் உட்பட எல்லாவற்றையும் இழந்து கங்கைக் கரையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வாழ்கிறார்கள். பகவதியின் கணவரும் இளவரசனுமான விஜயவர்மன் (சின்னப்பா) காந்தாரத்தின் அரியணையைக் கைப்பற்றியவர்களால் சிறையில் தள்ளப்படுகிறான். விஜயவர்மன் அங்கிருந்து தப்பித்து தன் இராச்சியத்தைக் கைபற்ற திட்டமிருகிறான். இதற்கிடையில் இளவரசிகள் இருவரும் கங்கையில் விழிந்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்கின்றனர். அவர்களை ஒரு முனிவர் காப்பாற்றுகிறார். அர்த்தநாரீசுவரரின் ஆசீர்வாதத்தைப் பெற்று, நம்பிக்கை கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். விஜயவர்மன் அவனது நண்பர்களில் ஒருவனால் மீட்கப்பட்டு, எதிரிகளைத் தோற்கடித்து, காந்தாரத்தை மீட்டு, இரண்டு இளவரசிகளுடன் மீண்டும் இணைகிறான்.[2]

நடிப்பு தொகு

பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் தி இந்து தகவல் தளங்களில் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு உருவாக்கபட்டது[1][2]

தயாரிப்பு தொகு

அர்த்தநாரி படத்தின் திரைக்கதையை நாடக ஆசிரியரும் பத்திரிகையாளருமான பி. எஸ். இராமையா எழுதினார். படத்தின் முதன்மை ஒளிப்பதிவு, அப்போது அடையாறு விஜயநகரம் அரண்மனையில் அமைந்திருந்த பிரகதி ஸ்டுடியோவில் நடந்தது.[2]

இசை தொகு

படத்தின் பின்னணி இசை, பாடல் இசை போன்றவற்றை மெட்ராஸ் யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷனின் இசைக்குழுவினர் அமைத்தனர். பாடல்களை பாபநாசம் சிவன், ராஜகோபால் ஐயர் ஆகியோர் எழுதினர். பி. யு. சின்னப்பா படல் சில பாடல்களைப் பாடினார்.[2]

வரவேற்பு தொகு

தி இந்துவில் எழுதிய திரைப்பட விமர்சகர் மற்றும் வரலாற்றாசிரியரான ராண்டார் கை, "சின்னப்பாவின் நல்ல நடிப்பிற்காகவும், டி. ஆர். ரகுநாத்தின் சிறந்த இயக்கத்திற்காகவும்" படம் நினைவுகூரப்பட்டது என்று குறிப்பிட்டார்.[2] அர்த்தநாரி வணிகரீதியாக சராசரி வெற்றியை ஈட்டியது.[2]

மேற்கோள்கள் தொகு