அறந்தாங்கி

இது தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்

அறந்தாங்கி (ஆங்கிலம்:Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும்.[4] அறந்தாங்கி ஒரு செட்டிநாடு பகுதி ஆகும்.

அறந்தாங்கி
—  முதல் நிலை நகராட்சி  —
அறந்தாங்கி
இருப்பிடம்: அறந்தாங்கி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°09′40″N 78°59′46″E / 10.161°N 78.9961°E / 10.161; 78.9961
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் அறந்தாங்கி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
நகராட்சி் தலைவர்
சட்டமன்றத் தொகுதி அறந்தாங்கி
சட்டமன்ற உறுப்பினர்

ராமச்சந்திரன் (இ.தே.கா)

மக்கள் தொகை 40,814 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெயர்க்காரணம் தொகு

அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர் இவ்வூரின் சங்ககால பெயர் மிழலைகூற்றம், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை 40,814 ஆகும். மக்கள்தொகையில் 20,101 ஆண்களும், 20,713 பெண்களும் உள்ளனர். 10,130 குடும்பங்களும், 27 வார்டுகளும் கொண்ட அறந்தாங்கி நகராட்சியின் எழுத்தறிவு 90.59% ஆகவுள்ளது. பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4340 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 74.52%, இசுலாமியர்கள் 22.01%, கிறித்தவர்கள் 3.42% மற்றும் பிறர் 0.05%ஆகவுள்ளனர்.[5]

பள்ளிகள் தொகு

1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி
அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளி
அரசினர் பெண்கள் மேல் நிலை பள்ளி
அலி ஜைனம் ஜமாத் ஒரிஎண்டல் அரபிக் மேல் நிலை பள்ளி

போன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன  

தனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில்  கலை  கல்லூரிகளும்  ஐ டி ஐ கல்லூரிகளும்  அறந்தாங்கியில்   அருகாமையிலேயே உள்ளன

ஆதாரங்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. Aranthangi Municipality
  5. அறந்தாங்கி நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறந்தாங்கி&oldid=3855225" இலிருந்து மீள்விக்கப்பட்டது