அலியா பக்சால்

அலியா பக்சால் (Alya Bakhshal) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதியாவார். அரசியல் தொழிலாளியாகவும் ஓர் அமைப்பாளராகவும் இவர் செயற்பட்டார். பெண்கள் சனநாயக முன்னணி [2] என்ற பெண்ணிய அமைப்பில் பொதுச் செயலாளராக இவர் இருந்தார். சிந்து மாகாணத்தின் அவாமி தொழிலாளர் கட்சியின் பெண் செயலாளராகவும் இவர் பொறுப்பு வகித்தார். [3]

அலியா பக்சால்
Alya Bakhshal
தாய்மொழியில் பெயர்عالیہ بخشل
பிறப்புஅலியா பக்சால்
சூன் 03, 1978
தேசியம்பாக்கித்தானியர்
பணிஅரசியல் பணியாளர்
அறியப்படுவதுபெண்ணியவாதி,பெண்கள் சனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர், அவாமி தொழிலாளர் கட்சியின் மகளிர் செயலாளர், சிந்து [1]

அரசியல் தொகு

அலியா பக்சால் ஒரு சமதர்மவாத [4] பெண்ணிய அமைப்பாளர் [5] [6] [7] ஆவார். பாக்கித்தானின் சிந்து மாகாணம் கைர்பூர் மிர்சைச் சேர்ந்த இவர் தற்போது சிந்துவின் ஐதராபாத்து நகரத்தில் வசித்து வருகிறார்.

அவாமி தொழிலாளர் கட்சி

அலியா பக்சால் அவாமி தொழிலாளர் கட்சியின் மூத்த மற்றும் முன்னணி உறுப்பினர் மற்றும் சிந்து மாகாணத்தின் மகளிர் செயலாளராக பணியாற்றுகிறார். [8]

பெண்ணியம் தொகு

பெண்கள் நடவடிக்கை மன்றம்

அலியாவின் அரசியல் போராட்டமும் பெண்ணியமும் இவர் மகளிர் செயல் மன்றத்தில் சேர்ந்தபோது தொடங்கியது. [9] பின்னர் அவாமி தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். சமதர்ம பெண்ணிய நிறுவனமான பெண்கள் சனநாயக முன்னணியைத் தொடங்கிய நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். [10] [11] சமதர்ம பெண்ணிய அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் பெண்கள் சுதந்திர அணிவகுப்பையும் [12] சர்வதேச மகளிர் தினத்தையும் கொண்டாடுகிறது. பாலியல், வர்க்கம் மற்றும் தேசத்தின் அடிப்படையில் பாக்கித்தானில் ஒட்டுமொத்த சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக ஆணாதிக்க ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் வன்முறை ஆகியனவற்றைப் பற்றி பேசுகின்ற நரிவாத் இதழையும் இவ்வமைப்பு வெளியிடுகிறது.

பெண்கள் சனநாயக முன்னணி

பெண்கள் சானநாயக முன்னணியில் பக்சால் பொதுச் செயலாளராகப் பணியாற்றுகிறார் [13] பெண்கள் ஜனநாயக முன்னணியின் [14] [15] செயலில் உறுப்பினராக, [16] சிந்து மாகாணப் பெண்களின் தொழிலாள வர்க்கத்தை ஏற்பாடு செய்வதற்காக இவர் சிந்து முழுவதும் பல அரசியல் பள்ளிகளையும் ஆய்வு வட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார். தொற்றுநோய் காலத்தின் போது பெண்கள் சனநாயக முன்னணி மன்றத்தில் இருந்து சுகாதாரப் பணியாளர்களுக்காக இவர் குரல் கொடுத்தார்.[17] தொழிலாள வர்க்கம், [18] மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்தும் குரல் எழுப்பினார். [19] 2020 மாணவர் அணிவகுப்பின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்த இவர், மாணவர் சங்கங்களை சனநாயக உரிமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று கோரினார். [20]

அவுரத் ஆசாதி அணிவகுப்பு

2018 ஆம் ஆண்டு முதல் சிந்து மாகாணத்தில் பெண்கள் சனநாயக முன்னணியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து பக்சால் ஆராத் ஆசாதி அணிவகுப்பை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான இயக்கம் அரசியலற்றதாகிவிட்டது. இடதுசாரிகளிடமிருந்து இந்த இயக்கத்திற்கு எதிர்ப்பு கூட உள்ளது என்று டான் செய்தி இதழுக்கான நேர்காணலில் பக்சால் கூறியுள்ளார். பெண்களின் விடுதலை ஒரு பிற்போக்கு சிந்தனையாக இருக்க முடியாது. ஏனெனில் ஆணாதிக்கம் முதலாளித்துவம் மற்றும் இனவெறி உள்ளிட்ட பிற சமூக அச்சுறுத்தல்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த நேர்காணலின்போது மேலும் இவர் கூறினார். சிந்து நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் சமீபத்திய ஆண்டுகளில் பல சுதந்திரங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், முற்போக்குக் குடும்பங்களில் இருந்து வந்து வேலைக்குச் செல்லவும், படிக்கவும் ஊக்கமளிக்கும் இந்தப் பெண்களுக்கு, அவர்கள் அரசியலில் நுழையும்போது எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர் என்றும் பக்சால் அப்போது தெரிவித்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Reporter, A. (26 May 2016). "‘Liberal feminism not enough to address social oppression women face’" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1260735. 
  2. Reporter, The Newspaper's Staff (15 April 2020). "Concerns raised over healthcare workers contracting infection" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1549279. 
  3. "Way forward: Fanoos Gujjar takes up AWP mantle" (in en). The Express Tribune. 17 October 2016. https://tribune.com.pk/story/1201206/way-forward-fanoos-gujjar-takes-awp-mantle. 
  4. "Short course held at Irtiqa Institute to mark 200 years of Karl Marx" (in en). The Express Tribune. 25 February 2018. https://tribune.com.pk/story/1644689/1-short-course-held-irtiqa-institute-mark-200-years-karl-marx. 
  5. "Rally against police for double murder case". Daily Times. 26 September 2016. https://dailytimes.com.pk/55571/rally-against-police-for-double-murder-case/. 
  6. "WDF demands to repeal ban on media coverage of KP’s girls’ schools | Pakistan Today". www.pakistantoday.com.pk. https://www.pakistantoday.com.pk/2018/10/30/wdf-demands-to-repeal-ban-on-media-coverage-of-kps-girls-schools/. 
  7. "طالبات کو ہراساں کرنے کے خلاف سندھ شاگرد اتحاد کامظاہرہ". jang.com.pk. https://jang.com.pk/news/696429-sindh. 
  8. ""Aurat Jagi": The Left Way". The Friday Times. 13 March 2015. https://www.thefridaytimes.com/aurat-jagi-the-left-way/. 
  9. Correspondent, The Newspaper's Staff (12 October 2015). "WAF launches ‘Stop killing women’ campaign". https://www.dawn.com/news/1212429. 
  10. "WDF inaugurated to give women’s movement a new impetus | Pakistan Today". https://www.pakistantoday.com.pk/2018/03/08/wdf-launched-to-give-womens-movement-a-new-impetus/. 
  11. "Women's Democratic Front launched to build a vibrant, socialist and a feminist movement". 9 March 2018. https://dailytimes.com.pk/212473/womens-democratic-front-launched-to-build-a-vibrant-socialist-and-a-feminist-movement/. 
  12. "World marks Women’s Day hot on heels of rights demands – The High Asia Herald". https://thehighasia.com/world-marks-womens-day-hot-on-heels-of-rights-demands/. 
  13. "Reflection of increasing awareness, acceptance of women’s rights" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/290051-reflection-of-increasing-awareness-acceptance-of-women-s-rights. 
  14. "Justice demanded for girls killed in name of ‘honour’ in Waziristan". Daily Times. https://dailytimes.com.pk/614302/justice-demanded-for-girls-killed-in-name-of-honour-in-waziristan/. 
  15. "‘Neoliberal economic system has failed, structural changes are only way forward’" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1553811. 
  16. "WDF hails passing of Sindh Women Agriculture Workers Bill" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/588930-wdf-hails-passing-of-sindh-women-agriculture-workers-bill. 
  17. "WDF voices concern over growing vulnerability of healthcare workers to COVID-19" (in en). www.thenews.com.pk. https://www.thenews.com.pk/print/644431-wdf-voices-concern-over-growing-vulnerability-of-healthcare-workers-to-covid-19. 
  18. "‘Pandemic lays bare world order’s failure’" (in en). The Express Tribune. https://tribune.com.pk/story/2211087/2-pandemic-lays-bare-world-orders-failure. 
  19. "‘Violence against women neglected in lockdown’" (in en). The Express Tribune. https://tribune.com.pk/story/2220994/1-violence-women-neglected-lockdown. 
  20. "Rally demands restoration of student unions" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1592737. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலியா_பக்சால்&oldid=3278894" இலிருந்து மீள்விக்கப்பட்டது