அலெக்சாண்டர் தீவு

அலெக்சாண்டர் தீவு, அண்டார்டிக்காவின் மிகப்பெரிய தீவாகும். அலெக்சாண்டர் தீவு பெல்லிங்ஸ்ஹவுசென் கடலில், அண்டார்டிக் தீபகற்பத்தில் உள்ள பால்மர் நிலத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அலெக்சாண்டர் தீவு வட-தெற்கு திசையில் சுமார் 390 கிலோமீட்டர் (240 மைல்) நீளமானது.[1] அலெக்ஸாண்டர் தீவு தேவோன் தீவுக்கு பின்னர், உலகின் இரண்டாவது மிகப் பெரிய குடியேற்றமல்லாத தீவு ஆகும்.

வரலாறு தொகு

அலெக்சாண்டர் தீவு 1821 ஆம் ஆண்டு ஜனவரி 28 இல் ஓர் ரஷ்ய பயணத்தின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பயணத்தை ஃபேபியான் கோட்லிப் வான் பெல்லிங்ஸ்ஹவுசெனின் தலைமையிலானது. [1][2][3]அவர் இத்தீவுக்கு ரஷ்யப் பேரரசரான முதலாம் அலெக்சாண்டரின் பெயரை வைத்து, அலெக்சாண்டர் தீவு என்று பெயரிட்டார்.

நிலவியல் தொகு

அலெக்ஸாண்டர் தீவின் மேற்பரப்பு பெரும்பாலும் பனியால் மூடப்பட்டுள்ளது. அலெக்ஸாண்டர் தீவில் உள்ள மலைத்தொடர்கள்: கோல்பர்ட், ஹாவ்ரே, லாசஸ், ரோயன், சோபியா பல்கலைக்கழகம், வால்டன் மலைகள் மற்றும் பல.[4][1][5]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 U.S. Geological Survey Geographic Names Information System: அலெக்சாண்டர் தீவு
  2. Siple, Paul (1963). "Obituary: Carl R. Eklund, 1909–1962". Arctic (Arctic Institute of North America) 16 (2): 147–148. doi:10.14430/arctic3531. http://pubs.aina.ucalgary.ca/arctic/Arctic16-2-147.pdf. பார்த்த நாள்: 2013-01-19. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-10.
  4. Stewart, J. (2011) Antarctic An Encyclopedia McFarland & Company Inc, New York. 1776 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780786435906.
  5. Smith, J.A., M.J. Bentley, D.A. Hodgson, and A.J.Cook (2007) George VI Ice Shelf: past history, present behaviour and potential mechanisms for future collapse. Antarctic Science 19(1):131–142.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சாண்டர்_தீவு&oldid=3704734" இலிருந்து மீள்விக்கப்பட்டது