அல்ஃபாத்திஹா (குர்ஆன்)

அல்ஃபாத்திஹா (Sūrat al-Fātiḥah, அரபு மொழி: سورة الفاتحة‎), என்பது திருக்குர்ஆனின் முதலாவது அத்தியாயம் ஆகும்.[1] இவ்வத்தியாயம் தொழுகையின் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.[2]

அல்ஃபாத்திஹா- வசனங்கள்: 7- மக்காவில் அருளப்பட்டது

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாகத் திகழும் அல்ஃ பாத்திஹா (தோற்றுவாய்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

பெயர் தொகு

அல் ஃபாத்திஹா என்ற அரபுச் சொல்லுக்கு தோற்றுவாய், முதன்மையானது எனப் பொருள். திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமாக இது அமைந்துள்ளதால் இந்தப் பெயர் வந்தது

சிறப்புகள் தொகு

இந்த சூறாவைக் கொண்டுதான் அல்லாஹ் அல்குர்ஆனை ஆரம்பிக்கிறான்.

திருக்குர்ஆனின் 114 அத்தியாயங்களில் சூரத்துல் பாத்திஹா அத்தியாயம் தனிச்சிறப்புகள் பல விளங்குகிறது.இந்த அத்தியாயம் குர்ஆனின் ஒரு அத்தியாமாக இருந்தாலும் இந்த அத்தியாத்தின் சிறப்பைப்பற்றி குர்ஆனின் ஒரு வசனமே எடுத்துரைக்கிறது. இது வேறு எந்த அத்தியாயத்திற்கும் இல்லாத தனிப் பெரும் சிறப்பாகும்.

  • அந்த வசனம்*وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعاً مِّنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ) الحجر87

நிச்சயமாக நாம் உமக்குத் திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்தான குர்ஆனையும் வழங்கியுள்ளோம். குர்ஆன் 15:87.

  • இந்த அத்தியாயத்தின் சிறப்பு பற்றி ஏராளமான நபிமொழிகளும் உள்ளன.

لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்கு தொழுகை இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி 756, முஸ்லிம் 651, அபூதாவூது 821, நஸயி 896)

மேற்கோள்கள் தொகு

  1. Maududi, Sayyid Abul Ala. Tafhim Al Quran. http://www.englishtafsir.com/Quran/1/index.html. 
  2. Ibn Kathir. "Tafsir" (PDF). p. 12. Archived from the original (PDF) on 2013-11-26. பார்க்கப்பட்ட நாள் 2014-02-13.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்ஃபாத்திஹா_(குர்ஆன்)&oldid=3579391" இலிருந்து மீள்விக்கப்பட்டது