அல்-நஸ்ர் (Al-Nasr) எனும் கசாரா போரளிக்குழு ஆப்கானிஸ்தான் நாட்டின் இடது சாரி அரசை எதிர்த்துப் போராடிய குழுக்களுள் ஒன்று. அல்-நஸ்ர் எனும் அரபி மொழிச் சொல்லுக்கு வெற்றி என்று பொருள். 1980 களில் ஆப்கானிஸ்தானின் இடது சாரி அரசை எதிர்த்துப் போராடிய குழுக்களுள் ஸூரா-இ எடீஃபாக்-இ-இஸ்லாமி ஆக்பானிஸ்தானுக்குப் பின் அல்-நஸ்ர் முக்கியமான ஒன்றாகும். இக்குழுவின் பெரும்பான்மையான இளைஞர்கள் ஈரான் நாட்டில் கல்வி கற்றவர்கள். இக்குழுவிற்கு ஈரானின் கொமேனி அரசின் ஆதரவு இருந்தது.[1] இக்குழு தெஹ்ரான் எட்டு கூட்டமைப்பில் அங்கம் வகித்தது.

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-நஸ்ர்&oldid=2695747" இலிருந்து மீள்விக்கப்பட்டது