அல்-பாதர் (Al-Badr, வங்காள மொழி:আল বদর,அரபி: البدر‎ ) எனும் அரபுச் சொல்லுக்கு முழு நிலவு என்று பொருள். இது மேற்குப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு பிரிவாகும். இது கிழக்குப் பாகிஸ்தானில் (தற்போதைய வங்காளதேசம்) இயங்கி வந்தது. இது வங்கதேசப் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்டது.[1]

உறுப்பினர்களும் அவர்களின் பணியும் தொகு

இக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிகளிலிருந்தும் இஸ்லாமிய மதராஸாக்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கண்காணிப்புக் காவலுக்கும்[1] இந்திய வங்காளதேச எல்லைப் பாதுகாப்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.[2]

கைதும்,மன்னிப்பும் தொகு

வங்காளதேசப் போரில் பாகிஸ்தான் தோல்வியுற்ற பின்னர் இக்குழு கலைக்கப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் வந்த சேக் முஜிபுர் ரகுமான் ஆட்சிக் காலத்தில் இவர்கள் மன்னிக்கப்பட்டனர்.

போர்க்குற்றங்கள் தொகு

இக்குழுவினர் மீது வங்காளதேசம் பாகிஸ்தானிலிருந்து பிரிவதை எதிர்த்தது, பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தது,[3] சிறுபான்மை இந்துகள் மீது தாக்குதல் நடத்தியது, இந்துப் பெண்களை கற்பழித்தது, இந்துகளை இஸ்லாமியர்களாக மதம் மாற வற்புறுத்தியது மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடரப்பட்டன.[4][5][6][7]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 R. Sisson and L. E. Rose. Pakistan, India, and the Creation of Bangladesh, University of California Press, 1990, p. 165.
  2. A. R. Siddiqui, East Pakistan - the Endgame: An Onlooker's Journal 1969-1971, Oxford University Press, 2004.
  3. "Bangladesh sentences Jamaat-e-Islami leader to death for war crimes". The Guardian. 28 பெப்ரவரி 2013. http://www.guardian.co.uk/world/2013/feb/28/bangladesh-sentences-jamaat-e-islami-leader-death. பார்த்த நாள்: 5 ஏப்ரல் 2013. 
  4. "Bangladesh party leader accused of war crimes in 1971 conflict". The Guardian. 3 அக்டோபர் 2011. http://www.guardian.co.uk/world/2011/oct/03/bangladesh-party-leader-accused-war-crimes. பார்த்த நாள்: 5 பெப்ரவரி 2013. 
  5. "Charges pressed against Ghulam Azam". New Age. 12 திசம்பர் 2011 இம் மூலத்தில் இருந்து 2013-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131216100737/http://newagebd.com/newspaper1/archive_details.php?date=2011-12-12&nid=43333. பார்த்த நாள்: 23 சனவரி 2013. 
  6. "Ghulam Azam was 'involved'". The Daily Star (Bangladesh). 2 நவம்பர் 2011. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=208936. பார்த்த நாள்: 23 சனவரி 2013. 
  7. "Bangladesh: Abdul Kader Mullah gets life sentence for war crimes". BBC News. 5 பெப்ரவரி 2013. http://www.bbc.co.uk/news/world-asia-21332622. பார்த்த நாள்: 5 பெப்ரவரி 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-பாதர்&oldid=3232411" இலிருந்து மீள்விக்கப்பட்டது