அழுத்தமின் விளைவு

அழுத்தமின் விளைவு (Piezoelectricity) என்பது படிகம், சிலவகை பீங்கான்கள் போன்ற சிலத் திடப்பொருட்களிலும் எலும்பு, டி.என்.ஏ மற்றும் பலவகை புரதங்கள்[1] போன்ற உயிரியல் பொருட்களிலும் வெளிப்பொருட்களால் அழுத்தம் கொடுக்கப்படும்போது அவை மின்னூட்டம் பெறுதலாகும்.

அழுத்த மின் விளைவு ஓர் குறிப்பிட்ட படிகத்தில் இயக்க மற்றும் மின்னியல் நிலைகளுக்கிடையேயான இயக்கமின்னியல் இடைவிளைவாகும்.[2] இந்த விளைவு ஓர் மீள்தக்க முறைமையாகும். அதாவது அழுத்தமின் விளைவுடைப் பொருட்களுக்கு மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் அவை எதிர் அழுத்த மின்விளைவாக இயக்கத் தகைவு பெறுகின்றன. காட்டாக ஈய சர்கோனைட் டைடானேட் படிகங்களை 0.1%வரை வடிவுமாற்றல் அழுத்தம் கொடுக்கப்படும்போது குறிப்பிடத்தக்க அழுத்தமின்னோட்டம் பெறப்படுகிறது. நேர்மாறாக அதே படிகங்களுக்கு வெளி மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது 0.1% வரை தன் வடிவமாற்றத்தைப் பெறுகிறது.

அழுத்தமின் விளைவு மின்னோட்டம் ஒலி எழுப்பும் மற்றும் கண்டறியும் கருவிகள், உயரழுத்த மின்னாக்கிகள், மின் அதிர்வெண்ணாக்கிகள், நுண்தராசுகள், ஒளிப்பட அமைப்புகளில் நுண்ணிய குவியப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் பெரிதும் பயனாகின்றன. மேலும் பல அணுக்கருவியல் அறிவியல் கருவிகளிலும் பயனாகின்றது. சாதாரண வாழ்வில் சிகரெட் கொளுத்திகளில் மற்றும் எரிவளி அடுப்புக்களை மூட்டும் கருவிகளிலும் தீப்பொறி வழங்கும் வளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Holler, F. James; Skoog, Douglas A; Crouch, Stanley R (2007). "Chapter 1". Principles of Instrumental Analysis (6th ). Cengage Learning. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780495012016. 
  2. Gautschi, G (2002). Piezoelectric Sensorics: Force, Strain, Pressure, Acceleration and Acoustic Emission Sensors, Materials and Amplifiers.. Springer. https://archive.org/details/piezoelectricsen0000gaut. 

வெளியிணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்தமின்_விளைவு&oldid=3812420" இலிருந்து மீள்விக்கப்பட்டது