அவிரா ஓர் ஜேர்மனி நச்சுநிரல் (ஆண்டிவைரஸ், இணையப் பாதுகாப்பு மென்பொருள் நிறுவனமாகும். 1988 இல் முதன் முறையாக அறிமுகமான இந்த மென்பொருட்கள் "H+BEDV Datentechnik GmbH" என்றவாறு அறியப்பட்டது. இதன் பதிப்புக்களில் ஒன்றான அன்ரிவிர் பேசனல்எடிசன் கிளாசிக் (AntiVir PersonalEdition Classic) பிரத்தியேகப் பாவனைகளுக்கு இலவசமானது ஆகும். இது இயங்குநிலையில் ஒய்யாராமான (ஸ்டைல் - Style) விரிந்த குடையொன்றைக் காட்சியளிக்கும்.

அவிரா ஆண்டிவிர் பேசனல் எடிசன் கிளாசிக்
உருவாக்குனர்அவிரா நிறுவனம்
அண்மை வெளியீடுV9.0.0.410 / செப்டம்பர் 26 2009 (2009-09-26), 5297 நாட்களுக்கு முன்னதாக
இயக்கு முறைமைவிண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா, லினக்ஸ், பிறீபீஎஸ்டி, ஓப்பன்பீஸ்டி, சொலாரீஸ்[1]
மென்பொருள் வகைமைநச்சுநிரல்
உரிமம்மூடியமூலம் / இலவசமென்பொருள் / தொந்தரவுமென்பொருள்
இணையத்தளம்அவிரா

இதன் 8ஆவது பதிப்பானது 14 ஏப்ரல் 2008 இல் வேகமாக நச்சுநிரல்களைத் தேடும் எந்திரத்துடன் புதுப்பொலிவூட்டப்பட்ட இடைமுகத்துடனும் வெளிவந்தது. 17 அக்டோபர் 2008 இல் இதன் நச்சுநிரற் தேடல் எந்திரத்தினை மேம்படுத்தியது. அவிரா நிறுவம் 20% வரை வேகத்தைக் கூட்டிக் கொண்டதாக அறிவித்தது. [2]

அவிரா நச்சுநிரல் காலத்திற்குக் காலம் நச்சுநிரற் கோப்பு அகராதியை மேம்படுத்திக் கொள்ளும். இச்செயன்முறையின் போது குறிப்பட்ட அகராதியொன்றை பொதுவான ஓர் அகராதி மூலம் மாற்றீடு செய்து கொள்ளும். இச்செயன்முறை மூலம் வேகமான தேடலை மேற்கொள்ள முடிகின்றது. 22 அக்டோபர் 2008 இல் இதன் ஆகப் பிந்தைய வைரஸ் அகராதி மேம்படுத்தலானது நடைபெற்றது. இச்செயன்முறையின் போது ஏறத்தாழ 15 மெகாபைட் அளவுள்ள கோப்பைப் பதிவிறக்கவேண்டி வந்ததால் பயனர்களுக்கும் வழங்கிகளுக்கும் (சர்வர்) இடையூறு ஏற்பட்டது. இக்காரணத்தால் அவிரா நிறுவனம் பிரத்தியேகப் பதிப்பிற்காக நொடிக்கு 6 ஜிகாபிட்ஸ் தரவுப் பரிமாற்ற வசதியுள்ள இணைப்பைப் பெற்றுக் கொண்டது. [3]

பிரயோகங்கள் தொகு

ஆண்டிவிர் பேசனலெடிசன் கிளாசிக் (AntiVir PersonalEdition Classic) இது பிரத்தியாகப் பாவனைக்கு மட்டுமே. ஏனைய நச்சுநிரல்கள் (ஆண்டிவைரஸ்) போலவே கோப்புக்களை அலசி ஆராய்ந்து வைரஸ் உள்ளதா என்று கண்டறிவதோடு இயங்குதளத்தின் பின்னணியில் இயங்கி திறக்கப்படும் மற்றும் மூடப்படும் கோப்புகளை சோதனைசெய்யும். அத்துடன் இய்ங்குதளத்துடன் இணைந்துள்ள றூட்கிட் (RootKit) ஐயும் கண்டுபிடித்து இயலும் என்றால் நீக்க உதவுகின்றது. இது இணையமூடான மேம்படுத்தலகளை (வழமையானதேர்வு ஒவ்வொருநாளுமாகும்) செய்வதோடு அவ்வாறு செய்கையில் ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பினை ((AntiVir PersonalEdition Premium.) வாங்குமாறு பயனர்களைத் தொந்தரவு செய்யும்.

ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பு (AntiVir PersonalEdition Premium.) வருடத்திற்கு 20 யூறோ விலைமதிப்பானது இது இலவச மென்பொருட்களைத் விட கீழ்கண்ட முக்கியமான மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது.

  • வைரஸ் மாத்திரம் அன்றி கெட்டமென்பொருட்கள் (மல்வயார் - Malware), கணினிப் புழுக்கள் (வோம்ஸ் - Worms) விளம்பரமென்பொருட்களான அட்வயார் மற்றும் ஒற்றுமென்பொருட்களையும் ஸ்பைவேர் களையும் கண்டறிகின்றது.
  • ஆண்டிவைரஸ் மேமபடுத்தல்கள் இதன் இலவசப் பதிப்பை விடவும் வேகமானது ஏனெனில் பணம்கட்டிய பதிப்பிற்கெனவே விசேடமான பதிவிறக்க சேவர்களைக் கொண்டுள்ளது.
  • அவுட்லுக், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற மின்னஞ்சல் மென்பொருட்களை மின்னஞ்சலைப் பெறமுன்னரே POP3 இல் ஸ்கான் பண்ணியே மின்னஞ்சல்களை அனுமதிக்கும்.

ஆண்டிவைரஸ் வேக்ஸ்ரேஷன் வர்தகரீதியான பாவனைக்கானது. இதற்கு வருடத்திற்கு 59 யூறோ கட்டணம் செலுத்தவேண்டும். இது ஆண்டிவிர் பேசனல்எடிசன் பிறிமியம் பதிப்பு (AntiVir PersonalEdition Premium.) இற்கு மேலதிகாம வலையமைப்பூடாகக் கோப்புக்களைப் பரிமாறும் பிட்ரொறண்ட் போன்ற P2P (peer to peer) வலையமைப்பில் இருந்தும் பாதுகாக்கின்றது ஆண்டிவிர் சேவர் AntiVir Server இது சேவருக்கானது, ஆண்டிவிர் சேவர் (AntiVir MailServer) மற்றும் ஆண்டிவிர் புறொக்ஸிசேவர் (AntiVir ProxyServer) புறொக்கிசேவரைப் பாதுப்பதற்கானதாகும் இவை நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்கான யூறோ செலவாகும் இவை பயனர் எண்ணிக்கை (10-250) மற்றும் உரிம ஒப்பந்த ஆண்டுகளின் எண்ணிக்கையில் தங்கியுள்ளது (1, 3, 5 வருடங்கள்). ஆண்டிவிர் மொபைல் விண்டொஸ் சீஈ (Windows CE) இயங்குதளத்தில் இயங்கும் பாக்ட்பிஸி (PocketPC) அல்லது சம்பியன் இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மாட் போன் இயங்கக் கூடியவை.

உசாத்துணைகள் தொகு

  1. "அவிரா ஆண்டிவைரஸ் இயங்குதளத் தேவைகள்". Avira GmBH. பார்க்கப்பட்ட நாள் 2007-11-19.
  2. "அவிரா நச்சுரற் தேடலை வேகப்பபடுத்தியுள்ளது". Archived from the original on 2009-04-08. பார்க்கப்பட்ட நாள் 2009-06-04.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-14. பார்க்கப்பட்ட நாள் 2009-06-04.

வெளியிணைப்புக்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அவிரா&oldid=3541969" இலிருந்து மீள்விக்கப்பட்டது