அவ்லா உள் விளையாட்டு அரங்கம்

இந்திய உள்விளையாடு அரங்கம்

அவ்லா உள்விளையாட்டு அரங்கம் (Hawla Indoor Stadium) இந்தியாவின் மிசோரம் மாநிலத் தலைநகரம் அய்சால் நகரில் அமைந்துள்ளது. முக்கியமாக கூடைப்பந்து கூட்டமைப்பின் மிசோரம் சிறப்பு கூட்டணைவுப் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது .

அவ்லா உள் விளையாட்டு அரங்கம்
Hawla Indoor Stadium
பிட்டர் டி டிலாங்கு விளையாட்டு அரங்கம்
அவ்லா உள் விளையாட்டு அரங்கம்
முழு பெயர் அவ்லா உள் விளையாட்டு அரங்கம்
இடம் அய்சால், மிசோரம், இந்தியா
திறவு
உரிமையாளர்
குத்தகை அணி(கள்)
அமரக்கூடிய பேர் 3,000

விளையாட்டரங்கம் தொகு

 
அவ்லா உள்விளையாட்டரங்கத்தில் மிசோரம் கூட்டமைப்பின் கூடைப்பந்து விளையாட்டு

மைதானத்தில் சுமார் 3,000 பார்வையாளர்கள் அமரும் திறன் உள்ளது. மைதானத்தின் முதல் தளத்தை கூடைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளுக்குப் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் தரை தளத்தில் உடற்பயிற்சிக்கூடம் தற்காப்புக் கலைகள் மற்றும் மேசைப் பந்து விளையாட்டு வசதிகள் உள்ளன. மிசோரம் சிறப்பு கூட்டிணைவு எனப்படும் இந்தியாவின் முதல் தொழில்முறை கூடைப்பந்து கூட்டிணைவுப் போட்டிகள் இந்த மைதானத்தில் விளையாடப்படுகின்றன. [1]

வரலாறு தொகு

2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இந்த விளையாட்டு அரங்கம் மிசோரம் உள்துறை அமைச்சர் பு ஆர் லால்சிர்லியானாவால் திறக்கப்பட்டது. இந்த அரங்கத்தின் கட்டுமானம் 2008 ஆம் ஆண்டு தொடங்கியது. வடகிழக்கு இந்திய விளையாட்டுப் போட்டிகளில் அவ்லா உள்ளரங்க அரங்கம் ஒன்றாகும். [2]

மேற்கோள்கள் தொகு

  1. "GIG Motors Mizoram Super League Season 4: A thiam ber Zarkawt BCA an champion". Vanglaini. Archived from the original on 27 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 November 2018.
  2. "NE Games thleng turin a hun takah engkim peih tum". The Zozam Times. Archived from the original on 10 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 16 August 2012.