ஆக்கெர்டைட்டு

ஆக்சைடு கனிமம்

ஆக்கெர்டைட்டு (Haggertyite) என்பது Ba(Fe2+6Ti5Mg)O19 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய பேரியம், இரும்பு, மக்னீசியம், தைட்டனேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் ஆர்கன்சாசு மாநிலம், பைக் மாகாணம் மூர்பிரீசுபோரோ நகரத்திற்கு அருகில் அமைந்திருக்கும் மாநில வைரப்பள்ளப் பூங்காவில் 1996 ஆம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. நுண்ணிய இவ்வுலோகக் கனிமம் அறுகோண அமைப்பில் படிகமாகி சிறிய அறுகோண தகடுகளை உருவாக்குகிறது. ரிக்டெரைட்டு, செர்பென்டினைட்டு, ஒலிவைன் போன்ற கனிமங்களுடன் சேர்ந்து சிலவகையான அக்னிப்பாறைகளில் இது காணப்படுகிறது. ஆக்கெர்டைட்டு கனிமம் இரும்பு(II) அயனி மிகுதியாக உள்ள ஒரு பிளம்பைட்டு குழுவின் உறுப்பினர் என்று கருதப்படுகிறது. வெளிர் சாம்பல் நிறம் கொண்டு, மோவின் அளவு கோலில் 5 என்ற கடினத்தன்மை அளவைப் பெற்று ஓர் ஒளிபுகா கனிமம் என்று இது விவரிக்கப்படுகிறது.

ஆக்கெர்டைட்டுHaggertyite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுBa(Fe2+6Ti5Mg)O19
இனங்காணல்
நிறம்சாம்பல்
படிக இயல்புநுண்ணிய அறுகோணத் தட்டுகள்
படிக அமைப்புஅறுகோணப்படிகம்
மோவின் அளவுகோல் வலிமை5
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.87 (கணக்கிடப்பட்டது)
மேற்கோள்கள்[1][2]

புளோரிடா அனைத்துலகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 1938 ஆம் ஆண்டு பிறந்த புவி இயற்பியலாளர் சிடீபன் இ ஆக்கெர்டி கண்டுபிடித்த காரணத்தால் கனிமத்திற்கு ஆக்கெர்டைட்டு என பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  • Grey, I. E., Danielle Velde, and A. J. Criddle, 1998, Haggertyite, a new magnetoplumbite-type titanate mineral from the Prairie Creek (Arkansas) lamproite: American Mineralogist, v. 83, p. 1323-1329 Am. Min. abstract

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கெர்டைட்டு&oldid=2919294" இலிருந்து மீள்விக்கப்பட்டது