ஆங்கில ஒப்பீட்டு வாக்கியம்

இலக்கணக்கூறு

ஆங்கிலத்தில் மூன்று வகையில் ஒப்பிடலாம். அவை, positive degree, comparative degree மற்றும் superlative degree எனப்படும்.

ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Positive Degree) தொகு

ஒரு பொருளை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்வதே ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (positive degree) ஆகும்.

  • (எ-டு)
  1. The rose is a beautiful flower. (உரோசாப் பூ ஒரு அழகானப் பூ.) (Positive degree)
  2. Kumar is a clever boy. (குமார் புத்திசாலியான பையன்.)

வாக்கிய அமைப்பு தொகு

இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம்(Comparative Degree) தொகு

ஒரு பொருளை மற்றொரு பொருளுடனோ அல்லது மற்ற பல பொருட்களுடனோ ஒப்பிடுவதே இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியம் (comparative degree) எனப்படும்.

  • (எ-டு)
  1. The rose is more beautiful than the lily. (உரோசாப் பூ லீலீப் பூவை விட அழகாக உள்ளது.) (Comparative degree)
  2. Kumar is cleverer than many other boys/most other boys. (குமார் பல/பெரும் பாலான பையன்களை விட புத்திசாலி.)

===[[ஆங்கிலச் சொற்றொடர் அமைத்தல்/கட்டுதல்|வாக்கிய அம

அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம்(Superlative Degree) தொகு

ஒரு பொருளை மற்ற எல்லா பொருட்களோடும் ஒப்பிட்டுப் பேசுவதே அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியம் (superlative degree) ஆகும்.

  • (எ-டு)
  1. The rose is the most beautiful flower. (உரோசாப் பூ உலகிலேயே அழகிய பூ.) (Superlative degree)
  2. Kumar is the cleverest boy. (குமார் தான் உலகிலேயே புத்திசாலியான பையன்.)

வாக்கிய அமைப்பு தொகு

குறிப்புகள் தொகு

  • ஒரு பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல் எந்த மாற்றமும் கொள்வதில்லை.
  • இரு பொருள்/பல பொருள் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -er என்ற எழுத்துகளையோ அல்லது more என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், than என்ற சொல்லையும் ஒப்பிடப்படும் இரண்டாவது பொருளின் முன் கொண்டு வரும்.
  • அனைத்துப் பொருட்களின் ஒப்பீட்டு வாக்கியத்தில் வரும் பெயர் உரிச்சொல், அதன் இறுதியில் -est என்ற எழுத்துகளையோ அல்லது most என்ற மற்றொரு சொல்லையோ கொண்டு வருவதுடன், the என்ற பெயர்சொற்குறியையும் வினைச்சொல்லின் பின்னும் பெயர் உரிச்சொல்லின் முன்னுமாகக் கொண்டு வரும்.

மேலும் காண்க தொகு