ஆசாத்து உல்லா சா

இந்திய அரசியல்வாதி

ஆசாத்து உல்லா சா (Assad Ullah Shah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை சம்மு காசுமீர் மாநிலத்தின் குப்வாரா தொகுதில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] குப்வாரா தேசிய மாநாட்டிற்கு தலைவராகவும் இவர் இருந்தார். காசுமீர் வெளியேறு இயக்கத்தின் உறுப்பினராகவும், சேக் அப்துல்லாவுக்கு நெருக்கமானவராகவும் ஆசாத்து உல்லா சா இருந்தார். பக்தவார் பேகம் என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார்.

ஆசாத்து உல்லா சா
உறுப்பினர், சம்மு காசுமீர் சட்டப் பேரவை
பதவியில்
1977–1983
முதலமைச்சர்சேக் அப்துல்லா
பாரூக் அப்துல்லா
தொகுதிகுப்வாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1926 குப்வாரா சம்மு காசுமீர் இராச்சியம்
இறப்பு2004 குப்வாரா சம்மு காசுமீர் மாநிலம்
அரசியல் கட்சிசம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி
துணைவர்பக்தவார் பேகம்

அரசியல் வாழ்க்கை தொகு

ஆசாத்து உல்லா சா தனது அரசியல் வாழ்க்கையை காசுமீர் வெளியேறு இயக்கத்தின் மூலம் தொடங்கினார். இதற்காக ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டில் இவர் சம்மு காசுமீரின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Kupwara". Outlook. 16 September 2002. https://www.outlookindia.com/website/story/kupwara/217248. 
  2. "🗳️ Assad Ullah Shah, Kupwara Assembly Elections 1977 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்து_உல்லா_சா&oldid=3847772" இலிருந்து மீள்விக்கப்பட்டது