ஆசா டி வோசு

ஆசா டி வோசு (Asha de Vos) என்பவர் இலங்கையைச் சேர்ந்த கடலியல் உயிரியலாளர் ஆவார். வடக்கு இந்தியப் பெருங்கடலில் நீலத் திமிங்கல ஆராய்ச்சியின் முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார்.[1] கடலியல் கல்வி கற்பித்தலிலும் நீலத் திமிங்கல ஆராய்ச்சி திட்டத்திற்கும் பெயர் பெற்றவராகத் திகழ்ந்தார். 2018 ஆம் ஆண்டில் பிபிசி வானொலியின் 100 பெண்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

ஆசா டி வோசு
Asha de Vos
2013 ஆம் ஆண்டில் ஆசா டி வோசு
இயற்பெயர்ආශා ඩි වොස්
பிறப்பு1979 (அகவை 44–45)
இலங்கை
துறைகடலியல் உயிரியல்
கல்வி கற்ற இடங்கள்புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம், மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநீலத் திமிங்கிலத் திட்டம்
விருதுகள்பி.பி.சி 100 பெண்கள்
2020 கடல் கதாநாயகி]
கண்டுபிடிப்பாளர் விருது
இணையதளம்
ashadevos.com

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

ஆசா டி வோசு 1979 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். இவருக்கு ஆறு வயதாக இருந்தபோது இவருடைய பெற்றோர் ஆசாவுக்கு தேசிய புவியியல் பத்திரிகைகளைக் கொண்டு வருவார்கள். அந்த புத்தகங்களின் பக்கங்களைப் பார்த்து, "அது ஒரு நாள் நானாக இருப்பேன்" என்று ஆசா கற்பனை செய்து பார்ப்பார். யாரும் போகாத இடங்களுக்குச் சென்று, யாரும் பார்க்காத செய்திகளை பார்ப்பேன் என்று கனவும் காண்பாராம். "சாகச விஞ்ஞானி" ஆக கனவு காண இப்பத்திரிகைகள ஆசா டீவோசைதூண்டியது.[4][5]

ஆசா டி வோசின் ஆரம்பக் கல்வி கொழும்பு மகளிர் கல்லூரியில் முடிந்தது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து கொழும்பு சர்வதேசப் பள்ளியில் படித்து முடித்த ஆசா புனித ஆண்ரூட்சு பல்கலைக்கழகத்தில் கடல் மற்றும் சுற்றுச்சூழல் உயிரியலில் இளங்கலை படிப்புக்காக இசுக்காட்லாந்துக்குச் சென்றார். மேலும் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த உயிர் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேற்கு ஆத்திரேலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை முடித்தார்.[6][7]

கடல் பாலூட்டி ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மற்றும் ஒரே இலங்கையர் ஆசா டி வோசு ஆவார்.[8]

இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் கடல் மற்றும் கடலோரப் பிரிவில் மூத்த திட்ட அதிகாரியாக டி வோசு பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டில் இலங்கை நீல திமிங்கலம் திட்டத்தை நிறுவினார். இத் திட்டம் வட இந்தியப் பெருங்கடலுக்குள் நீலத் திமிங்கலங்கள் பற்றிய முதல் நீண்டகால ஆய்வை உருவாக்கியது. ஒவ்வோர் ஆண்டும் புலம்பெயர்வதாக நினைக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் நீலத் திமிங்கலங்கள் ஆண்டு முழுவதும் இலங்கைக்கு அருகிலுள்ள நீரில் தங்கியிருப்பதை இவர் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்தார்.[5][9]

டி வோசின் ஆராய்ச்சியின் காரணமாக , சர்வதேச திமிங்கல ஆணையம் இலங்கை நீலத் திமிங்கலங்களை பாதுகாப்பு ஆராய்ச்சியின் அவசரத் தேவையுள்ள ஒரு இனமாக அங்கீகரித்தது. பின்பு திமிங்கலக் கப்பல் தாக்குதல்களில் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தொடங்கியது.

டி வோசு ஐயுசிஎன் உயினிங்கள் உயிர்வாழும் ஆணையத்தின் சீடாசியன் நிபுணர் குழுவின் அழைக்கப்பட்ட உறுப்பினரானார். இவர் கலிபோர்னியா சாண்டா குரூசு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட அறிஞராகவும், தேசிய புவியியல் கழகத்தின் விருந்தினர் வலைப்பூ பதிவராகவும் இருந்தார்.[10][11]

இலங்கையின் முதல் கடல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் கல்வி அமைப்பான இலாப நோக்கற்ற அமைப்பான ஓசன்வெல் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் ஆசா டி வோசு ஆவார். கடலோரங்களின் ஆரோக்கியம் மற்றும் எதிர்காலம் உள்ளூர் மக்களைச் சார்ந்தது என்று டி வோசு நம்புகிறார்.

மேற்கத்திய விஞ்ஞானிகளின் வளரும் நாடுகளில் தரவுகளைச் சேகரிக்கும் ஆராய்ச்சி பாதுகாப்பு முயற்சிகளை முடக்குகிறது என்று இவர் வாதிடுகிறார்.[12]. டி வோசு தனது திறமையால் பெண்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர்களின் பாலினம் தங்கள் திறனை மட்டுப்படுத்த விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "These 20 women were trailblazing explorers—why did history forget them?". Magazine (in ஆங்கிலம்). 2020-02-13. பார்க்கப்பட்ட நாள் 2020-06-05.
  2. "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). BBC News. 2018-11-19. https://www.bbc.com/news/world-46225037. 
  3. "ආශා ඩි වොස්: ඔක්ස්ෆර්ඩ් විශ්වවිද්‍යාලයේ විශිෂ්ටත්වයට පාත්‍ර වූ ලාංකික කතගෙන් උගත හැකි පාඩම්" (in si). BBC News සිංහල. https://www.bbc.com/sinhala/sri-lanka-48579940. 
  4. Wight, Andrew. "What's It Like To Be Sri Lanka's First Whale Biologist?". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
  5. 5.0 5.1 "සමුද්‍ර ක්ෂීරපායී පර්යේෂකයින් අතරින් ආචාර්ය උපාධියක් ලබා ගත් පළමු සහ එකම ශ්‍රී ලාංකිකයා". www.alpanthiya.lk (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-11-15. பார்க்கப்பட்ட நாள் 2021-01-26.
  6. "Asha de Vos, Marine Biologist and Ocean Educator, Information, Facts, News, Photos". National Geographic. Archived from the original on 2017-03-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-06.
  7. "පාසලේදී පසුගාමී වුව ද ලෝකයේ ම විශිෂ්ටත්වයට පත් ශ්‍රී ලාංකික කත" (in si). BBC News සිංහල. https://www.bbc.com/sinhala/sri-lanka-48579940. 
  8. "Blue whales in a changing world: Wildlife and Nature Protection Society Monthly Lecture – March 2017". The Island. March 11, 2017 இம் மூலத்தில் இருந்து ஜூன் 26, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180626135927/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=161773. 
  9. "Leading the Way: Meet the Next Generation of Explorers". Magazine (in ஆங்கிலம்). 2016-05-16. பார்க்கப்பட்ட நாள் 2020-06-07.
  10. "Ocean of opportunities for this young woman of the sea". Sundaytimes.lk. 2016-07-31. பார்க்கப்பட்ட நாள் 2017-04-06.
  11. "Together they traverse the deep blue sea". Sundaytimes.lk. பார்க்கப்பட்ட நாள் 2017-04-06.
  12. "Sri Lankan Whale Researcher Calls for an End to 'Parachute Science'". Oceans (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-09.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_டி_வோசு&oldid=3857420" இலிருந்து மீள்விக்கப்பட்டது