ஆணவம் என்பது "நான்", "எனது (என்னுடையது)" என்னும் நினைப்பு. எடுத்துக்காட்டாக, நான்தான் இந்நாட்டிலேயே மிகுந்த செல்வம் உடையவன்; அல்லது படித்தவன்; என்பது போல.

இந்து சமயத்தில் ஆத்மா அல்லது ஆன்மா ஒன்று உண்டு என்னும் "அறிவு" தனை மறந்து, "நான்", "எனது" என உரிமை கொண்டாடி (அஞ்ஞானங்களை விளைவித்து), தன் செல்வங்களிலும், தன் மனைவி மக்கள் ஆகியோர்களிடம் அன்பு காட்டி இன்புற்று, அவற்றில் மயங்குகிறோம் என்பதை ஆத்மா அறியாதபடி ஒளித்து ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு எல்லாம் தன்னுடையதே என இருத்தல் ஆணவம் எனப்படுகிறது.

இது மோகம், மதம், இராகம், விடா(ஷா)தம், தாபம், சோட(ஷ)ம், வைசித்ரியம் என்னும் காரியங்களைச் செய்யும்.

இதன் பெயர்கள்: ருக், பசுத்வம், அஞ்ஞானம், ஆவ்ருதி, மூலம், ம்ருத்யு, மூர்சை, அஞ்சனம், நீவாரம், அவித்தை, பாவம், ஷயம், கிலானி என்பன. (அபிதான சிந்தாமணி - பக்124)

மேலும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆணவம்&oldid=3297025" இலிருந்து மீள்விக்கப்பட்டது