ஆதர்டன் மார்ட்டின்

டொமினிக்கன் சுற்றுச்சூழல் ஆர்வலர்

ஆதர்டன் மார்ட்டின் (Atherton Martin) இலத்தீன் அமெரிக்க நாடான டொமினிகன் நாட்டைச் சேர்ந்த ஒரு வேளாண் விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். திட்டமிடப்பட்ட பெரிய செப்பு சுரங்க நடவடிக்கைகளின் காரணமாக சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களுக்கு இலக்கான வெப்பமண்டல காடுகளை பாதுகாப்பதற்கான இவரது முயற்சிகளுக்காக 1998 ஆம் ஆண்டில் மார்ட்டினுக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1]

ஆதர்டன் மார்ட்டின்
Atherton Martín
தேசியம்டொமினிக்கன் நபர்
பணிவேளாண் விஞ்ஞானி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (1998)

இயற்கை வளமான பல்லுயிர் பெருக்கத்திற்காக ஓர் இயற்கை தீவு என்று அழைக்கப்படும் டொமினிகாவை உள்ளடக்கிய அசல் வெப்பமண்டல மழைக்காடுகளில் 10% பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு செப்பு சுரங்கத்தை நிறுத்துவதற்கு அதெர்டன் மார்ட்டினின் முயற்சிகள் வெற்றிகரமான உதவின.

மேற்கோள்கள் தொகு

  1. "Islands and Island Nations 1998. Atherton Martin. Dominica. Oil & Mining". Goldman Environmental Prize. Archived from the original on 23 November 2010. பார்க்கப்பட்ட நாள் 30 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதர்டன்_மார்ட்டின்&oldid=3148017" இலிருந்து மீள்விக்கப்பட்டது